வேலூர் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கையின்போது, வீடியோ பதிவு செய்யப்படும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வேலூர் மக்களவைத் தொகுதியில் கடந்த 5ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில், பதிவான வாக்ககள் நாளை எண்ணப்படுகின்றன. இந்தநிலையில், வாக்கு எண்ணிக்கை முழுவதையும் வீடியோ பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். வாக்கு எண்ணிக்கையின்போது, முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும் என்றும், பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் எனவும் கூறினார்.  


காலை 10 மணி முதல் 11 மணி வரை முன்னணி நிலவரங்கள் தெரியவரும் என குறிப்பிட்ட அவர், ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 5 ஒப்புகைசீட்டு இயந்திரம் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு கடைசியில் எண்ணப்படும் என தெரிவித்தார். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்தில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.