ஒன்றாய் பிறந்த 11 அனகோண்டாக்களை பார்க்க இந்தியாவின் அமேசான் காட்டுக்கு போகலாமா?
தென் அமெரிக்காவின் அமேசான் காடுகளில் தான் பொதுவாக அனகோண்டா பாம்புகள் காணப்படும். ஆனால் இந்தியாவில் அனகோண்டக்களை பார்க்க விருப்பமா? இதோ…
கொல்கத்தா: World Snake Day ஆண்டுதோறும் ஜூலை 16ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு இந்தியாவில் உலக பாம்பு தினமான இன்றைய நாளை என்றும் மறக்க முடியாததாக மாற்றிவிட்டது கொல்கத்தாவில் இருந்து வந்திருக்கும் பாம்புச் செய்தி…
கொல்கொத்தா அலிப்பூர் விலங்கியல் பூங்காவில் உள்ள அனகோண்டா பாம்பு 11 குழந்தைகளை ஈன்றுள்ளது என்பது நல்ல செய்தித்தானே?
ஜூன் 2019 இல், தலா இரண்டு ஆண் மற்றும் பெண் அனகோண்டாக்கள் மெட்ராஸ் பாம்பு பூங்கா (Madras Snake Park) விலிருந்து அலிப்பூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டன.
மிருகக்காட்சிசாலையில் அனகோண்டாவுக்காக அமேசான் மழைக்காடுகளைப் போன்ற செயற்கை மழைக்காடு (Artificial rain forest) உருவாக்கப்பட்டது. அப்போதுதான் அனக்கோண்டாக்கள் இயல்பாக வாழ முடியும் என்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.
Read Also | உலக பாம்புகள் தினம் 2020: இவையே பூமியில் இருக்கும் 5 விசித்திரமான பாம்புகள்...
அனகோண்டா பாம்புகள் பொதுவாக தென் அமெரிக்காவில் அமைந்துள்ள அமேசான் காடுகளில் தான் காணப்படுகின்றன. தற்போது புதிதாகப் பிறந்த அனகோண்டாக்களை கால்நடை மருத்துவர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருவதாக மிருகக்காட்சிசாலையின் தலைமை அதிகாரி வினோத் குமார் யாதவ், ஜீ மீடியாவிடம் தெரிவித்தார்.
புதிதாகப் பிறந்த இந்த பாம்புகள் மக்களை ஈர்க்கும் மையமாக மாறும் என்றும் அவற்றைப் பார்க்க அதிகமான மக்கள் வருவார்கள் என்றும் மிருகக்காட்சிசாலையின் அதிகாரிகள் உற்சாகமடைகின்றனர். நாட்டின் பிற உயிரியல் பூங்காக்களுடன் விலங்குகளைப் பரிமாறிக் கொண்டு, சிறப்பாக செயல்படுவதாக அலிபூர் விலங்கியல் பூங்கா அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் இவற்றில் சில அனகோண்டா பாம்புகள் மாநிலத்தின் பிற உயிரியல் பூங்காக்களுக்கு மாற்றப்படும் என்றும் தெரிகிறது.