பராமரிப்பு பணி காரணமாக உலக அளவில் அடுத்த 48 மணி நேரத்துக்கு இன்டர்நெட் ஷட்-டவுன் செய்யப்பட வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது...! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்றைய உலகம் முழுக்க முழுக்க இணையதளம் மூலம் தான் இயங்குகிறது என்பது அனைவராலும் மறுக்க முடியாத உண்மை. நம் மக்களால் ஒருநாள் முழுக்க மின்சாரம் இல்லாமல் கூட இருக்கமுடியுமே தவிர இணையதளம் இல்லாமல் ஒரு நிமிடம் கூட இருக்க முடியவில்லை என்பது உண்மைதானே. 


இந்நிலையில், அடுத்த 48 மணி நேரத்துக்கு உலக அளவில் இணையத்தை பயன்படுத்துவது சிக்கலானதாக இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இணையதளம் இயங்குவதற்கு அடிப்படையாக இருக்கும் சர்வர்களில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வந்துள்ளது. இதனால், சுமார் 48 மணி நேரத்துக்கு உலக அளவில் இணையத்தை பயன்படுத்துவது சிக்கலானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இணைய முடக்கம் குறித்து, ரஷ்யா டுடே செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. 


இணையதளத்தை நிர்வகிக்கும் அமைப்புகளில் ஒன்றான ICANN, சர்வர்களில் இருக்கும் க்ரிப்டோகிராஃபிக் கீ-யை மாற்றும் என்று சொல்லப்படுகிறது. இந்த கீ தான், இணையத்தை பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் கருவியாக செயல்படுகிறது. 
தொடர்ச்சியாக உலக அளவில் சைபர் க்ரைம்கள் அதிகமாக நடந்து வரும் நிலையில் ICANN, இந்த நடவடிக்கையை எடுக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.


இந்த பராமரிப்பு செயல் குறித்து தகவல் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான CRA, ‘இந்த பராமரிப்பு பணி என்பது உலக அளவில் இணையத்தை பாதுகாப்பாக வைத்திருக்க மிகவும் அவசியமான ஒன்றாகும். இந்த பராமரிப்புப் பணி மூலம், உலக அளவில் பல பயனர்களின், இணையதள சேவை முடங்க வாய்ப்புள்ளது. 


பயனர்களுக்கு, இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் பாதிப்பு அதிகமாக இருக்கும்’ என்று அறிக்கை மூலம் தெளிவு படுத்தியுள்ளது...!