சிகிச்சை முடிந்து பூரண நலத்துடன் வீடு திரும்பினார் அருண் ஜெட்லி!
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட அருண் ஜெட்லி பூரண நலத்துடன் வீடு திரும்பினார்!
மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு கடந்த சில தினங்களாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தது. மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது அவருக்கு சிறுநீரகப்பை பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்தச் சூழலில் கடந்த மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து., அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தற்போது மேற்கொள்ளப்பட்டது. பிரபல சிறுநீரக மருத்துவ நிபுணர் சந்தீப் குலேரியா தலைமையிலான மருத்துவ குழுவினர் இந்த அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.
இதையடுத்து, அவருடைய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததையடுத்து, 3 வார கால ஓய்விற்கு பின்னர் தற்போது வீடு திரும்பியுள்ளார்.
இது தொடர்பாக அருண் ஜெட்லி டுவிட்டரில் கூறியிருப்பதாவது,,,,,!
வீட்டிற்கு திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த 3 வாரங்களாக கவனித்துக்கொண்ட டாக்டர்கள், நர்சுகள், பணியாளர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். முழு உடல்நலம் பெறும் வரை வீட்டிலேயே ஓய்வு எடுக்க அருண் ஜெட்லிக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.