சீனாவில் ஏற்பட்ட தீ-விபத்தில் 18 பேர் பலி, 5 பேர் காயம்!
தெற்கு சீன விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 18 பேர் பலியாகியுள்ளனர்!
ஹாங்காங்: தெற்கு சீன விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 18 பேர் பலியாகியுள்ளனர்!
சீனாவின் குயிங்யுவான் நகரத்தில் சுமார் ஒரு மணிநேரம் ஏற்பட்ட இத்தீவிபத்தினை முடிவுக்கு கொண்டுவர தீயனைப்பு வீரர்கள் கடம் போராட்டம் நடத்தியுள்ளனர்.
நேற்று நல்லிரவில் ஏற்பட்ட இந்த தீபத்திற்கான காரணம் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. இவ்விபத்திற்கான காரணம் குறித்து ஆராயப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தீடீரென ஏற்பட்ட இந்த தீவிபத்தில் 18 பேர் பலியாகியுள்ளனர். 5 பேர் காயமடைந்துள்ளனர். காயங்களுடன் மீட்கப்பட்டவர்களை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொன்டு சென்றுள்ளனர்.
சீனாவில் கட்டுப்பாட்டு வதிகளை பொதுமக்கள் கடைப்பிடிக்காததால் தான் இவ்வாறான விபத்துக்கள் நிகழ்வதாகவும், இதுகுறித்து ஆரய 40 நாள் சிறப்பு செயல் திட்டம் அமல் படுத்தப்பட்டுள்ளதாகவும் பெல்ஜியங் அரசு தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக கடந்த நவம்பர் மாதம் இதேப்போன்ற சம்பவத்தில் 19 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது!