தூத்துகுடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22-ம் தேதி நடந்த நூறாவது நாள் போராட்டத்தின் போது ஸ்டெர்லைட் ஊழியர் குடியிருப்புக்கு தீ வைத்ததாக நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 1996-ம் ஆண்டு தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை இயங்கி வந்தது. இந்த ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுவதாகவும், சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும் பொதுமக்கள் சார்பில் குற்றம்சாட்டப்பட்டது.


இதனால் இந்த ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அந்த பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வந்தார்கள். இந்த போராட்டத்தின் நூறாவது நாள் கடந்த 22-ம் தேதி எட்டியது. அப்போது போராட்டக்காரர்கள் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர்.


இந்நிலையில் இந்த கலவரத்தின்போது ஸ்டெர்லைட் ஆலையின் ஊழியர் குடியிருப்புக்கு தீ வைக்கப்பட்டதற்கு வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வரும் காவல்துறையினர், தற்போது நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வினயரசு என்பவரை கைது செய்துள்ளனர்