சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியாகிறது ‘கனா’ திரைப்படம்!
நடிகரகாக ரசிகர்கள் மனதை கொள்ளைக்கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தயாரிப்பாளராக புது அவதாரம் எடுத்துள்ளார்!
நடிகரகாக ரசிகர்கள் மனதை கொள்ளைக்கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தயாரிப்பாளராக புது அவதாரம் எடுத்துள்ளார்!
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வெளியாகும் முதல் படத்தின் பெயர் மற்றும் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. நடிகர் சத்தியராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் இத்திரைப்படத்திற்கு "கனா" என பெயரிடப்பட்டுள்ளது.
கிரிக்கெட் வீரராக ஆசைப்படும் மகள் - அவருடைய ஆசையை நிறைவேற்றி வைக்கப் பாடுபடும் அப்பா என்னும் கதைகளத்தினை படக்குழுவினர் கையில் எடுத்துள்ளனர்.
நடிகர், பாடகர், பாடலாசிரியர் எனப் பலமுகங்கள் கொண்ட அருண்ராஜா இப்படத்தினை இயக்குகிறார். திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார், பி.தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கின்றார். கலை இயக்குநராக லால்குடி என்.இளையராஜா பணியாற்றுகிறார்.
தனது கல்லூரி நண்பர்களுக்கா இப்படத்தினை தயாரிக்கும் சிவகார்த்திகேயன், கலையரசு என்பவருடன் இணைந்து இப்படத்தினை தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.