மீண்டும் தூத்துக்குடியில் இணைய சேவை துவக்கம்!!
தூத்துக்குடியில் ஐந்து நாட்களுக்கு பின்னர் மீண்டும் இணையதளம் சேவை துவக்கம்!
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இப்போராட்டத்தின்போது, நடத்தப்பட்ட காவல்துறையினரின் தடியடி, துப்பாக்கிச் சூடு, வாகனங்கள் எரிப்பு ஆகிய காட்சிகள் வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வளைதளங்களின் மூலம் உடனடியாக பரவி வருகின்றன.
இதனால் போராட்டம் தொடர்பாக தவறான வதந்திகள் இணையத்தில் பரவி வன்முறை வெடிக்கும் என கருதி தகவல்கள் பரவுவதை தடுக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ள தமிழக அரசு, தூத்துக்குடி, நெல்லை, குமரி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இணையதள சேவையை சுமார் ஐந்து நாட்களுக்கு இணைய சேவையை முடக்கியுள்ளது. மொபைல் போன்களிலும் இணைய சேவையை முடக்க அரசு ஆணை பிறப்பித்துள்ளது. மொபைல், தொலைப்பேசிகளில் குரல் சேவை மட்டும் கிடைக்கும் என அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், ஐந்து நாள்களுக்கு பிறகு தூத்துக்குடியில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் பயன்பாட்டிற்கு வந்தது.