மாணவருடன் பாலியல் உறவு வைத்துக்கொண்ட ஆசிரியை கைது!
ஐக்கிய நாடுகளின் ப்ளோரிடா-வில் பள்ளி மாணவருடன் பாலியல் தொடர்பு வைத்துக்கொண்ட ஆசிரியரை பள்ளி நிர்வாகம் காவல்துறையில் ஒப்படைத்துள்ளது.
ப்ளோரிடா: ஐக்கிய நாடுகளின் ப்ளோரிடா-வில் பள்ளி மாணவருடன் பாலியல் தொடர்பு வைத்துக்கொண்ட ஆசிரியரை பள்ளி நிர்வாகம் காவல்துறையில் ஒப்படைத்துள்ளது.
ப்ளோரிடா கிறிஸ்டேய்ன் பள்ளியில் ஆசிரியராக இருந்தவர் Suzanne Lea Owen(35). இவர் தன் பள்ளி மாணவர்களுடன் பாலியல் ரீதியான உறவு வைத்துக்கொண்டுள்ளார்.
இதனை அறிந்த பள்ள நிர்வாகம் காவல்துறையில் இவரை ஒப்படைத்துள்ளது. மேலும் இவரது கைப்பேசி செய்திகளை கொண்டு இவரது குற்றங்களும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தால் மாணவர்களின் வாழ்கையினை பாதிக்க விரும்பாத பள்ளி நிர்வாகம் சம்பந்தப்பட்ட மாணவர்களின் பேயர்களை வெளியிடவில்லை. மாறாக தம் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களின் பெற்றோரையும், பள்ளியில் கூட்டப் பிராத்தனை இருப்பதாக அழைத்து விவரத்தினை கூறியுள்ளது.
சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெயரினை வெளியிடாமல், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக பிராத்தனை செய்யுங்கள், தங்கள் பிள்ளைகளையும் நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளது.
குற்றம்சாட்டப்பட்ட Suzanne Lea Owen, தற்போது சிறையில் இருப்பதாகவும் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.