இங்கிலாந்து அணியின் அதிரடி நாயகன் கெவின் பீட்டர்சன், கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விளகியதாக அறிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டகாரரான கெவின் பீட்டர்சன், கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தான் விளகுவதை உறுதி செய்யும் வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தினில் பதிவிட்டுள்ளார்.



பீட்டர்சன் தற்போது பாக்கிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில், குவாட்டா க்ளாடியர் அணிக்காக விளாயாடினார். இந்த போட்டிகள் தான் தனது கடைசி கிரிக்கெட் போட்டிகளாக இருக்கும் என கடந்த மாதம் அவர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தகது.


37 வயதாகும் கெவின் பீட்டரசன், இந்தியாவில் நடைப்பெறு IPL போட்டிகளில் டெல்லி ட்ரேட்எவில்ஸ், பூனே அணிக்காகவும் விளையாடியுள்ளார். அதேப்போல் உள்ளூர் போட்டிகளில் சர்ரே அணிக்காக விளையாடியது குறிப்பிடத்தகத்து.


104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இவர் இதுவரை 23 சதம், 35 அரைசதங்கள் உள்பட 8181 ரன்கள் குவித்துள்ளார். இவரது பேட்டிங் சராசரியானது 47.28 ஆக உள்ளது.


அதேவேலையில் 136 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய இவர் இதுவரை 9 சதம், 25 அரைசதங்கள் உள்பட 4440 ரன்கள் குவித்துள்ளார். 


37 டி20 போட்டிகளில் விளையாடிய இவர் இதுவரை 7 அரைசதங்கள் உள்பட 1176 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது!