இந்தியன் ஸ்டார்ட்அப் வேக்ஃபிட் நிறுவனம் 9 மணி நேரம் தொடர்ந்து தூங்க ரூ .1 லட்சம் வரை சம்பளம் வழங்குவதாக அறிவிப்பு ஒந்த்ரை வெளியிட்டுள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மனிதர்களுக்கு தூக்கம் என்பது வாழ்நாள் முழுவதும் கண்டிப்பாக தேவையான ஒரு ஓய்வு நிலை. பெரும்பாலும் இரவு நேரம் என்பதே தூக்கத்துக்காக ஒதுக்கப்பட்டது தான். ஆனால் இப்பொழுதெல்லாம் இரவு நேரப் பணிகளைப் பார்த்து விட்டு பகலில் தூங்குகிறவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இவ்வளவு நேரம் தான் தூங்க வேண்டும் என்று ஒரு அளவு கோல் இருந்தாலும், தூக்கம் அவரவரின் பழக்கத்தைப் பொறுத்தே அமைகிறது. மனிதனின் மனதைக் கட்டுப்படுத்த, கெட்ட எண்ணங்களை சீர்படுத்த, கோபம், ஆத்திரத்தைக் குறைக்க இயற்கையாக படைக்கப்பட்ட ஒரு செயல் தூக்கம்.  இனிலையில், தினசரி 9 மணி நேரம் 100 நாட்கள் தூங்கினால் ரூ.1 லட்சம் சம்பளம் அளிப்பதாக பெங்களூர் மெத்தை நிறுவனம் கவர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


கர்நாடகா மாநிலம் பெங்களூருவை சேர்ந்த 'வேக்பிட் இனொவேஷன்ஸ்' (wakefit.co) என்ற புதிய நிறுவனம் தூக்கத்தை பற்றிய தங்கள் ஆராய்ச்சிக்காக, 100 நாட்களுக்கு, தினமும் ஒன்பது மணி நேரம் தூங்க தயாராக இருப்பவர்களுக்கு, 1 லட்சம் ரூபாய் சம்பளம் தர உள்ளதாக அறிவித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் அந்நிறுவனத்தின் இயக்குனரும், நிறுவனர்களில் ஒருவருமான, சைதன்யா ராமலிங்க கவுடா கூறுகையில்; வாழ்க்கை மற்றும் வேலை, இரண்டையும் சரியான விகிதத்தில் நிர்வகிப்பதன் மூலம், நம் உடல் ஆரோக்கியத்தில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து, ஆராய்ச்சி மேற்கொள்ள உள்ளோம். இதற்காக, ஆழ்ந்து உறங்க கூடிய, தூக்கத்தின் மீது விருப்பம் கொண்டவர்கள், நிறைய பேர் தேவைபடுகின்றனர்.


தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு, எங்கள் நிறுவனம் சார்பில், படுக்கை ஒன்று அளிக்கப்படும். அவர்கள், வழக்கம் போல தங்கள் அலுவலக வேலைகளை செய்யலாம். தினமும் இரவில், நாங்கள் கொடுத்த படுக்கையில் படுத்து உறங்க வேண்டும். குறைந்தபட்சம், ஒன்பது மணி நேரமாவது உறங்க வேண்டும். இரவு படுக்க போகும் போது, 'பைஜாமா' உடையை மட்டுமே அணிய வேண்டும். இப்படி, 100 நாட்களுக்கு உறங்க வேண்டும்.


இந்த காலகட்டத்தில், மடிக்கணினி பயன்படுத்த மட்டும் தடை. ஒவ்வொருவரின் உடலிலும், தூக்கத்தை கண்காணிக்கும் கருவி பொருத்தி, அதன் மூலம் அவர்கள் உறங்கும் விதங்கள் குறித்தும், குறிப்பிட்ட படுக்கையில் படுத்து உறங்குவதற்கு முன்னும், பின்னும் உள்ள மாற்றங்கள் குறித்தும், ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும்.
இதை, 100 நாட்கள் வெற்றிகரமாக செய்து முடிப்பவர்களுக்கு, 1 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்க தயாராக இருக்கிறோம். தூங்குவதற்கு அதிக விருப்பமும், சிறிய இடைவெளி கிடைத்தாலும் தூங்கிவிடும் தன்மை கொண்டவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.