பிரசவத்தின் போது குழந்தை இறந்து பிறந்ததால் தனது தாய்பாலை தானம் செய்த தாயின் செயல் பலரின் பரட்டை பெற்று வருகிறது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம்; அல்லது அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகலாவும் இருக்கலாம். அந்த நிகழ்வுகள் அனைத்து இணையதளம் மூலம் நம்மிடம் வந்து சேர்க்கிறது. அது வாழ்நாளில் நம்மால் மறக்க முடியாத நிகழ்வாக கூட அமையலாம். இந்நிலையில், பிரசவத்தின் போது குழந்தை இறந்து பிறந்ததால் தனது தாய்பாலை தானம் செய்த தாயின் செயல் பலரின் பரட்டை பெற்று வருகிறது. 


பத்து மாதம் வயிற்றில் சுமந்து பெற்ற குழந்தை பிறந்ததும் அதைக் கொஞ்ச தாய் எத்தனை ஆசை கொண்டிருப்பாரோ அத்தனை ஆசைகள் கொண்டிருந்தார், இளம் தாய் சியரா ஸ்ட்ராங்பீல்ட். இவரது வயிற்றில் குழந்தை வளர்ந்து வந்த போதே, குழந்தைக்கு  டிரிசோமி 18 என்ற ஒரு புதுவகை நோய் இருப்பதை டாக்டர்கள் சொல்ல தெரிந்துகொண்டார். அதனால் டாக்டர்கள் கருவை கலைந்து விடுமாறு கூறியும் அதை சியரா கேட்கவில்லை. பின்னர், குழந்தை பிறந்ததும், அதற்கு சாமுவேல் என்று பெயரிட்டார். 




ஆனால், மூன்று மணிநேரத்திலேயே குழந்தை இறந்துபோனது. இதனை தொடர்ந்து, மகள் சாமுவேல் இறந்ததன் நினைவாக , அடுத்த 63 நாட்களுக்கு தனது தாய்ப்பாலை தானம் செய்ய முன்வந்துள்ளார் சியரா. மேலும், வெஸ்டர்ன் கிரேட் பகுதியில் அமைந்துள்ள மதர்ஸ் மில்க் என்ற பேங்கிற்கு இவர் 500 அவுன்ஸ் தாய்ப்பாலை தானம் செய்து, ஒரு தாய்மையின் கருணை உள்ளத்தை உலக மக்களுக்கு அறியச் செய்துவிட்டார். இவருக்கு பாராட்டுகள் குவிந்துவருகிறது.