தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலையினை மூட தமிழக அரசு அரசாணை பிரப்பித்ததை அடுத்து இன்று ஸ்டர்லைன் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நடவடிக்கைக்கை பாராட்டுகள் தெரிவித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது...


"தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலையினை மூட தமிழக அரசு அரசாணை தமிழ மக்களுக்கு கிடைத்த வெற்றி. இந்த வெற்றியின் மூலம் தமிழக அரசியலின் தலையெழுத்தினை மக்கள் மாற்றியுள்ளனர். அரசியல்வாதிகளின் பொறுப்பு என்ன என்பதினை அவர்களுக்கு புரிய வைத்துள்ளனர். தமிழக மக்களின் செயல்பாட்டினை கண்டு தலை வணங்குகிறேன்.





 



அரசியல்வாதிகள் என்ன செய்ய வேண்டும் என்பதினை பொதுமக்கள் புரிய வைத்துள்ளனர். இதனை மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து எடுத்துறைக்கும்.


தமிழக மக்களின் 100 நாட்கள் அரப்போராட்டத்தினை அரசு முன்பே புரிந்துக்கொண்டு இருந்தால், கடந்த வாரம் ஏற்பட்ட இழப்புகள் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை.


தமிழ அரசின் ஆணையினை எதிர்த்து நிச்சையம் சம்பந்தப்பட்ட நிறுவனம் மேல் முறையீடு செய்யும், ஆனால் தமிழ அரசு தன் முடிவில் இருந்து மாறுபடக்கூடாது என உறுதியாக இருக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்!