தமிழகத்தில் பரபரப்பு: அரசு பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல்!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகள் கல்வீசி உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகள் கல்வீசி உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை, எழும்பூர், திண்டுக்கல், திருவாரூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகள் கல்வீசி உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளில் தனியார் பேருந்துகள் மீதும் கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் அந்த பகுதிகளில் போலீசார் குவிந்துள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போராட்டம் காரணமாக பல இடங்களில் அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகள் கல்வீசி உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இப்போராட்டத்தின் போது கிருஷ்ணகிரி அருகே அவதானப்பட்டி என்கிற இடத்தில் இரண்டு நகரப் பேருந்துகள் மற்றும் லாரிகள் மீது மர்மநபர்கள் கல்வீசித்தாக்குதல் நடத்தியதில், கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
திருவாரூர் மாவட்டத்திலும் பேருந்துகள் தாக்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் மத்திய அரசைக் கண்டித்து நடைபெற்ற கண்டனப் போராட்டத்தில் பத்து அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளில் தனியார் பேருந்துகள் மீதும் கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் அந்த பகுதிகளில் போலீசார் குவிந்துள்ளனர்.