சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக உலோகவியல் பொறியியல் ஆராய்ச்சி பட்டம் பெற்ற MK சூரப்பா அவர்களை கவர்னர் பன்வாரிலால் புரோகித் நியமித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இவர் பஞ்சாப் மாநிலம் ரோபரில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குனராக 6 ஆண்டுகள் (20.06.2009 to 20.06.2015) பணியாற்றியுள்ளார்.  


மெட்டாலர்ஜிகல் பொரியியல் பிரிவில் டாக்டர் பட்டம் பெற்ற MK சூரப்பா அவர்கள், 30 ஆண்டுகளுக்கு மேலாக கல்வியல் பிரிவில் அனுபவம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 24 ஆண்டுகாலம் இந்திய தொழில்நுட்ப பிரிவில் பணிபுரிந்துள்ளார். 


இதை தொடர்ந்து, சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடகத்தைச் சேர்ந்த MK சூரப்பா நியமிக்கப் பட்டதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்து வருகின்றது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், இதற்கு எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.  


இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்ட MK சூரப்பா அவர்கள் நாளை பதவி ஏற்க உள்ளார்.