மகாராஷ்டிராவில் கலை கட்டும் உகாதி திருநாள்: வீடியோ பார்க்க!
கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநில மக்கள் உகாதி என்ற புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.
நாடு முழுவதும் உள்ள மக்கள் புத்தாண்டு தொடக்கத்தை கொண்டாடி வருகிறார்கள். மஹாராஷ்டிராவில் உள்ள் மக்கள் குடி பத்வா எனும் திரு நாளாக இதனை கொண்டாடுகிறார்கள்.
பிரம்மா இந்த நாளில் பிரபஞ்சத்தை உருவாக்கியதாக நம்பப்படுகிறது. இதுவே இந்த திருவிழாவின் சிறப்பாக கருதப்படுகிறது.
இந்நாளில் மக்கள் அதிகாலையில் எழுந்து எண்ணெய் குளியல் செய்து புத்தாடை அணிந்து உகாதி பச்சடி செய்வதில் இருந்து நாள் ஆரம்பிக்கிறது. உகாதி அன்று பல்வேறு இசை நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள், தெலுங்கு சாகித்ய நிகழ்ச்சிகள் மற்றும் விருது வழங்குதல் ஆகியவை உகாதி நாளன்று நடைபெறுவது வழக்கம்.
உகாதி ஒவ்வோர் ஆண்டும் ஆங்கில தேதியின் படி ஏப்ரல் 6 அல்லது 7 தேதிகளில் கொண்டாடப்படுகிறது. இந்து நாட்காட்டியின் படி உகாதி சைத்ர (சித்திரை) மாதத்தின் முதல் நாள் ஆகும்.
சனமஹிஸம் மதத்தை பின்பற்றுகிற மணிப்பூர் மக்களும் சந்திர புத்தாண்டாக இந்த விழாவை கொண்டாடி வருகின்றனர்.
எனவே, மகாராஷ்டிராவில் தற்போது உகாதி திருநாள் களை கட்டி வருகின்றது. மக்கள் இசை நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள், ஆடல் பாடலுடன் தங்களது மகிழ்சியை தெரிவித்து வருகின்றார்.