லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுடன் இணையும் ஜி.வி.!
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுக்கு இணையும் ஜி.வி.பிரகாஷ்!!
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்த ‘நானும் ரெளடிதான், வேலைக்காரன் ஆகிய இரண்டு படங்களுக்கும் அனிருத் இசையமைத்தார். இரண்டுமே சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.
இதையடுத்து, நயன்தாரா நடிபில் உருவாகிவரும் ‘கோலமாவு கோகிலா’ படத்திற்கும் அனிருத் இசையமைத்து வருகிறார். ரஜினி முதல் விஜய்சேதுபதி வரை அனைத்து முக்கிய நடிகர்களுடனும் ஜோடியாக நடித்துவிட்டார்.
இந்த நிலையில் ரஜினி-யின் கார்த்திக் சுப்புராஜ் படம், கமல்-ளின் ஷங்கர் படம், அஜித்-தின் சிவா படம் மற்றும் மம்முட்டி நடிக்கவுள்ள தெலுங்கு படம் ஆகிய படங்களில் நயன்தாரா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானதை அடுத்து படப்பிடிப்பும் துவங்கியுள்ளது.
நடிகை நயன்தாரா தனது சிறந்த நடிப்பாற்றல் மூலம், பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டதன் மூலமாக லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் அவரை தேடி வந்தது.
இதை தொடர்ந்து, பாலா இயக்கத்தில் எக்ஸ்பிரஷன் கியூன் ஜோதிகாவுடன் நடித்த 'நாச்சியார்' பட வெற்றிக்கு பிறகு ஜி.வி.பிரகாஷின் கிரேட் தாறுமாறாக உயர்ந்துள்ளது. ஜி.வி-யின் அடுத்த படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், இப்படத்தில் மற்றொரு லீட் ரோலில் நடிக்க லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோலிவூட்டில் நடந்து வரும் போராட்டத்துக்கு பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று தெரிகிறது.
ஜி.வி. பிரகாஷ், தற்போது ராஜிவ் மேனன் இயக்கி வரும் 'சர்வம் தாள மையம்', சரத்குமாருடன் 'அடங்காதே' படங்களில் நடித்து வருகிறார். பாண்டிராஜ் இயக்கிய 'செம்ம', 4-ஜி, அயங்காரன், குப்பத்து ராஜா, 100% காதல் ஆகிய ஜி.வி. பிரகாஷின் படங்கள் வரிசையாக வெளியாக உள்ளன.