பழங்காலத்தில், வசந்த காலத்தை வரவேற்கும் விதமாகக் கிரேக்கர்கள் பல விழாக்களைக் கொண்டாடி வந்தனர். அதன் ஒரு சிறப்பாக பெண் தெய்வங்களை போற்றும் வகையில் அதற்கென தனி விழா எடுத்துக் கொண்டாடி வந்தனர். அப்போது உருவாகியது தான் அன்னையர் தினம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அம்மா என்ற வார்த்தைக்குள்தான் அத்தனை உயிரும், சுகமும் அடங்கியுள்ளது. உலகமே அம்மா என்ற வார்த்தைக்கு அடிமை. அம்மாவுக்கு இணை இந்த உலகில் வேறு எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது.


தாயிற் சிறந்த கோயிலுமில்லை, தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பது மந்திரம் இல்லை வேதமாகும். உலகில் மிகக் கடினமான பொறுப்பு தாயாய் இருப்பது தான். ஆனால் இதற்கு நீங்கள் யாருடைய பாராட்டையும் எதிர் பார்ப்பதில்லை. எங்களின் தோழி, வழிகாட்டி, குரு என எல்லாமே நீங்கள் தான். எதுவும் எதிர்பாராத அட்ஷய பாத்திரம் அவர்களின் அன்பாகும். 


ஒவ்வொரு மனித ஜீவனும் தன் தாயைப் பற்றி இப்படித்தான் நினைப்பார்கள். இந்த ‘அம்மா’ என்ற வார்த்தைக்கு மட்டும்தான் என்றும் யாராலும் ஜாதி, மத, மொழி, இன, நாடு, பண பேதம் பார்க்கவே முடியாது. ஏனெனில் இங்கு சுயநலமே கிடையாது. இங்கு அன்பு மட்டும் தான் உண்டு. 


சம்பளமே இல்லாத முழு நேர வாழ்நாள் வேலை அம்மா உத்யோகம் தான். ஒவ்வொரு குழந்தை பிறக்கும் பொழுதும் கூடவே ஒரு தாயும் பிறக்கின்றாள். ஒரு பெண் என்பவள் மனைவி, தாய் என்ற பதவி பெறும் பொழுது ‘நான், என் விருப்பம், என் வயிறு’ என்ற அனைத்தையும் கருப்பையில் இட்டு தியாகம் செய்து விடுகின்றார். 


இப்படி பட்ட அன்னையை போற்றும் வகையில் ட்விட்டரில் பல பிரபலங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்!