இந்திய கிரிக்கெட் அணியின் வேகபந்து வீச்சாளர் முகமது ஷமி மீது அவரது மனைவி ஹசின் ஜகான், முகமது ஷமிக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளது. அவரது குடும்பத்தினர் என்னை கொடுமை படுத்துக்கின்றனர். என்னை கொல்ல சதி செய்கின்றனர். கடந்த சில வருடங்களாக சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும், லண்டனை சேர்ந்த தொழிலதிபர் முகமது பாய் மூலம் அவருக்கு நிறைய பெண்களுடன் தொடர்பு இருக்கிறது என கூறிய ஹசின் ஜகான், அதற்கான ஆதாரங்களையும் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முகமது ஷமியை நடுரோட்டில் வைத்து அடிக்க வேண்டும் -மனைவி ஆவேசம்


மேலும் முகமது ஷமி மீது கொல்கத்தா போலீசாரிடம் புகார் அளித்து வழக்குபதிவு செய்தார். இதனையடுத்து, கொல்கத்தா போலீசார் முகமது ஷமி மீது கொலை முயற்சி, கற்பழிப்பு, சூதாட்டம் என பல பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் முகமது ஷமி குறித்து விவரங்களை பிசிசிஐயிடம் கொல்கத்தா போலீசார் கேட்டுள்ளனர். 


என் மனைவி (ஹசின் ஜகான்)-ன் குற்றச்சாட்டு பொய்யானது: முகமது ஷமி!


முகமது ஷமி மீது அவரது மனைவி சூதாட்ட புகார் தெரிவித்துள்ளதால், முகமது ஷமி குறித்து அறிக்கை சமர்பிக்க கூறி நீரஜ் குமாரை பிசிசிஐ நிர்வாகம் நியமித்து உள்ளது. இன்னும் இரண்டு வாரத்தில் அறிக்கை சமர்பிக்கப்படும். 


இதைக்குறித்து ஐபிஎல் நிறுவன தலைவர் ராஜீவ் சுக்லா கூறுகையில், முகமது ஷமி  தவறு செய்தாரா? இல்லையா? என்று கூற முடியாது. பிசிசிஐ அறிக்கை சமர்பித்த பிறகு, அவர் ஐபிஎல் போட்டியில் விளையாடுவார? இல்லையா? என்பதை நாங்கள் முடிவு செய்வோம் எனக் கூறினார். 


முகமது ஷமி மீது மேலும் ஒரு குற்றச்சாட்டை வைத்த மனைவி ஹசின் ஜகான்


முகமது ஷமி மீதனா சூதாட்ட புகார் நிருபிக்கும் பட்சத்தில், அவர் கிரிக்கெட் போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.