100 மொஹல்லா கிளினிக்குகளை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று திறந்துவைத்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லியின் சுகாதார விநியோக பொறிமுறையை வலுப்படுத்தும் முயற்சியில், தேசிய தலைநகரம் முழுவதும் அதிகமான மொஹல்லா கிளினிக்குகளை அமைக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நோக்கத்துடன், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் 100 மொஹல்லா கிளினிக்குகளை சனிக்கிழமை திறந்து வைத்தார்.


தற்போது, இதுபோன்ற 201 கிளினிக்குகள் மாநிலம் முழுவதும் செயல்பட்டு வருகின்றன, மேலும் 30 கிளினிக்குகள் மாலையில் இயங்குகின்றன.



இந்த ஆண்டு இறுதிக்குள் 500 மொஹல்லா கிளினிக்குகளை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.


குறித்த இந்த கிளினிக்குகளைத் தொடங்க குறைந்தபட்சம் 10 நபர்கள் இலவசமாக இடங்களை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.


மூன்று மெட்ரோ நிலையங்கள், ஐந்து காய்கறி சந்தைகள் மற்றும் மூன்று மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து முனையங்களில் கிளினிக்குகளைத் திறக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன என்று சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் மேற்கோளிட்டுள்ளார். சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கருத்துப்படி, அனைத்து மொஹல்லா கிளினிக்குகளும் CCTV கண்காணிப்பின் கீழ் வரப்போகின்றன.


இந்த கிளினிக்குகளில் சுமார் 212 வகை பரிசோதனைகள் மற்றும் 109 மருந்துக்கள் இலவசமாக மக்களுக்கு அளிக்கப்படுவது இதன் தனி சிறப்பு...