மும்பை: 100 வயது மூதாட்டி ஒருவருக்கு கோவிட் தடுப்பூசி போடப்பட்டது. மும்பையில் உள்ள பி.கே.சி ஜம்போ தடுப்பூசி மையத்தில் கோவிட் -19 தடுப்பூசி போட்டுக் கொண்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தனது 100வது பிறந்தநாளன்று கொரோனாவுக்கான தடுப்பூசியை போட்டுக்கொண்ட மூதாட்டி Shashikala Joshi, தடுப்பூசி மையத்தில் இருந்த சுகாதாரப் பணியாளர்களுடன் தனது பிறந்த நாளை கொண்டாடினார். அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது.



60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காகவும், குறிப்பிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காகவும் COVID-19 தடுப்பூசியின் இரண்டாவது கட்டம் திங்கள்கிழமை முதல் தொடங்கியது.


ஜனவரி 16 ஆம் தேதி நாடு தழுவிய தடுப்பூசி செயல்முறை துவங்கியது. முதல் கட்டத்தில் சுகாதார ஊழியர்களுக்கு வைரஸுக்கு எதிராக தடுப்பூசி போடப்பட்டது. முன்னணி பணியாளர்களுக்கான கட்டம் பிப்ரவரி 2 ஆம் தேதி தொடங்கியது.


Also Read | இந்த 7 நிறுவனங்களின் ஊழியர்களுக்கு தடுப்பூசி இலவசமாக போடப்படும்!!


முதல் டோஸ் போடப்பட்டு 28 நாட்களானவர்களுக்காக, இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடும் பணிகள் ப்ரவரி 13 அன்று தொடங்கின.


சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தற்காலிக அறிக்கையின்படி, திங்கள்கிழமை காலை 7 மணி வரை, 3,12,188 அமர்வுகளில் 1.56 கோடிக்கும் அதிகமான கோவிட் -19 தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளன.


மக்கள் இப்போது தங்கள் வசதிக்கேற்ப எப்போது வேண்டுமானாலும், கோவிட் -19 தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம் என்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் அறிவித்தார்.


Also Read | COVID-19 Vaccine vs PM Modi: கொரோனா தடுப்பூசியும் - பிரதமர் மோடியும்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR