Weight Loss Journey: உணவு கட்டுப்பாடு மூலம் உடல் எடையை கட்டுப்படுத்த தயாராக இருப்பவரா நீங்கள்? ஆனால், இரவில் சாப்பிடும் உணவை சரியாக சாப்பிட்டாலே உடல் எடையை குறைக்க முடியும் தெரியுமா?, அதற்கான 5 உணவுகளை முயற்சித்துப்  பாருங்கள். பசியும் எடுக்காது, வயிறு நிரம்புவதுடன், கொழுப்பு குறைந்து உடல் எடை சட்டென்று குறையும். காலை உணவை அரசரைப் போல சாப்பிடலாம், இரவு உணவை பிச்சைக்காரனைப் போல் இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். அதாவது, இரவு உணவு இலகுவாக இருக்க வேண்டும் என்பதே இதன் பொருள்.வயிறு நிரம்புவதற்காக சாப்பிட்டாலும், ஒரு நாளின் கடைசி உணவில் கலோரிகள் அதிகமாக இருக்கக் கூடாது, எனப்து முக்கியம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இரவு உணவை சற்று முன்னதாகவே சாப்பிட வேண்டும். தூங்குவதற்குக் 3 முதல் 4 மணி நேரத்திற்கு முன்பும் சாப்பிடலாம். இதைச் செய்வதன் மூலம் தூக்கம் நன்றாக இருக்கும், இரத்த அழுத்தம் குறைவாக இருக்கும் மற்றும் செரிமான அமைப்பும் ஆரோக்கியமாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் இரவில் லேசான உணவை உட்கொள்வதும் உடல் எடையை குறைக்க உதவுகிறது. 


மேலும் படிக்க | Anemia: மாதுளை - பீட்ரூட் மட்டுல்ல; இதுவும் ரத்த சோகையை குணப்படுத்தும்


ஜவ்வரிசி கிச்சடி
மரவள்ளிக்கிழங்கின் வேர்களில் இருந்து பெறப்பட்ட ஒரு தாவர ஸ்டார்ச் ஆன ஜவ்வரிசியில் அதிக அளவு கார்போஹைட்ரேட்டுகள் உள்ளது. இது இந்தியாவில் பிரபலமான உணவாகும், இதை காலை உணவாகவோ அல்லது இரவு உணவாகவோ சாப்பிடலாம்.


ஓட்ஸ் இட்லி
ஓட்ஸ் இட்லி நார்ச்சத்து நிறைந்த உணவு மட்டுமல்ல, இது மிகவும் இலகுவாகவும் சுவையாகவும் இருக்கும். காலை உணவு அல்லது இரவு உணவிலும் இந்த உணவை நீங்கள் சேர்க்கலாம். இது ஜீரணிக்க எளிதானது மற்றும் உங்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதற்கும் இது செயல்படுகிறது.


மேலும் படிக்க | Health Alert: பாகற்காயுடன் சாப்பிடக் கூடாத ‘சில’ உணவுகள்!


பாசிப் பருப்பு


நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளது, இது உங்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. இந்தப் பருப்பும் மிகவும் லேசாக இருந்தாலும் தேவையான ஊட்டச்சத்துக்களை கொடுக்கும்.


பப்பாளி சாலட்
பப்பாளியில் பப்பேன் என்ற இயற்கை நொதி உள்ளது மற்றும் இது வாயு, மலச்சிக்கல் போன்ற சிக்கல்களைக் குறைக்கும். உடல் எடையை குறைக்கவும் பப்பாளி உதவுகிறது.


சுரைக்காய்  
சுரைக்காய் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. பல ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ள \சுரைக்காய் செரிமான பிரச்சனைகளை நீக்கி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மிகவும் ஆரோக்கியமானது சுரைக்காய். 


மேலும் படிக்க | ஆரோக்கியமான நொறுக்குத் தீனிகள்! நீண்ட பயணத்துக்கு அவசியமானது


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ