சிங்கப்பூர்: செங்காங் பகுதி குடியிருப்பின் 11-வது மாடியில் இருந்த தவறி விழுந்த 2-வயது குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

செங்காங் பகுதியின் ரிவேர்வாலே செர்சென்ட் பகுதியில் பிளாக் 182A பகுதியில் நேற்று (நவம்பர் 25) காலை நடந்த இச்சம்பவம் குறித்து காலை 10 மணியளவில் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.


தவறி விழுந்த குழந்தையினை உயிருடன் மீட்டெடுத்த அப்பகுதி மக்கள் அருகில் இருந்த KK மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சுயநினைவுடன் மீட்கப்பட்ட குழந்தையின் உடலில் காயங்கள் அதிகம் காணப்பட்ட நிலையில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து குழந்தையின் காப்பாற்றியுள்ளனர்.


காவல்துறையினர் அளித்த தகவலின் படி மீட்கப்பட்ட குழந்தை தற்போது நலமாக இருப்பதாகவும், குழந்தைக்கு 7 தையல்கள் போடப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், இச்சம்பவம் எதேச்சையாக நிகழ்ந்தா இல்லை, திட்டமிடப்பட்டு செய்யப்பட்டதா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.