தெருவிளக்குகள் மூளை பக்கவாதத்தை ஏற்படுத்தலாம்... அதிர்ச்சி அளிக்கும் ஆய்வறிக்கை...!!
குடியிருப்பு பகுதியில் உள்ள ஒளியின் அளவை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்த போது, மூளை பக்கவாதம், உடலில் மெலடோனின் உற்பத்தி குறைவு முதல் பல கடுமையான நோய்களை ஏற்படுத்தும் அபாயம் அதிகரிக்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இரவில் பிரகாசமான தெரு விளக்குகள், நமக்கு வழி காட்டும் ஒளியாக இருக்கிறது என்பதோடு, இரவு நேர பாதுகாப்பிற்கு அத்தியாவசியம். ஆனால், இவை ஆரோக்கியத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறலாம் என கூறும் ஆய்வு அறிக்கைகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செயற்கைக்கோள் புகைப்படங்களைப் பயன்படுத்தி, குடியிருப்பு பகுதியில் உள்ள ஒளியின் அளவை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்த போது, மூளை பக்கவாதம், உடலில் மெலடோனின் உற்பத்தி குறைவு முதல் பல கடுமையான நோய்களை ஏற்படுத்தும் அபாயம் அதிகரிக்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். தெரு விளக்குகளின் பிரகாசமான ஒளி நம் உடலின் பயாலஜிகல் கிளாக் எனப்படும் உயிரியல் கடிகாரத்தை சீர்குலைக்கும் என்பதும் தெரியவந்துள்ளது.
சீனாவில் 28 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், இரவில் பிரகாசமான தெரு விளக்குகளின் பிரகாசம் நம் வீட்டை சுற்றி அதிகமாகும் நிலையில், பக்கவாதம் ஏற்படும் அபாயமும் அபாயத்தை அதிகரிக்கும் என்று ஒரு புதிய ஆய்வு காட்டுகிறது. இரவில் அதிக வெளிச்சத்தில் அதிகம் இருக்கும் நபர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயம் 43% அதிகம் என ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.
செயற்கைக்கோள் புகைப்படங்களின் உதவியுடன், குறிப்பிட்ட இடங்களின் ஒளியின் அளவை ஆராய்ச்சியாளர்கள் கணக்கில் எடுத்துக் கொண்டு, சம்பந்தப்பட்ட இடங்களில் வசிப்பவர்களின் உடல் நலப் பதிவுகளை ஆய்வு செய்ததில், வீடுகளைச் சுற்றி வெளிச்சம் அதிகம் உள்ளவர்களுக்கு பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
உடலில் சுரக்கும் லெலடோனின் என்னும் ஹார்மோன், இரவில் கும்மிருட்டில் தூங்கும் போது தான் உற்பத்தி ஆகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், தெரு விளக்குகளின் பிரகாசமான ஒளி உடலில் மெலடோனின் என்ற ஹார்மோனின் உற்பத்தியைக் குறைக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். தூக்கத்தை சீராக்க உதவும் மெலடோனின் ஹார்மோன் குறைவாக இருக்கும் போது, தூக்க பிரச்சனைகள் மட்டுமல்லாது உடலில் பல எதிர்மறை விளைவுகள் (Health Tips) ஏற்படலாம்.
தெரு விளக்குகளால் ஏற்படும் பாதிப்பில் இருந்து தப்பிக்க செய்ய வேண்டியவை ( How To Prevent Brain Stroke)
1. தூங்கும் போது அறையை முற்றிலும் இருட்டாக வைத்திருக்க முயற்சி செய்யவும். இருட்டாக இருப்பது சிலருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தினால், அறையில் மிக மங்கலான விளக்குகளைப் பயன்படுத்தவும்.
2. வீட்டை சுற்றி அதிக அளவில் மரங்களும், செடிகளும் இருப்பது வெளிச்சத்தைக் குறைக்க உதவும்.
3. உறங்கும் முன் மொபைல் போன்கள் அல்லது கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவதைக் குறைக்கவும், ஏனெனில் டிஜிட்டல் சாதனங்களில் இருந்து வெளிப்படும் நீல ஒளி தூக்கத்தைக் கெடுக்கும்.
4. நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள் தெரு விளக்குகளால் ஏற்படக்கூடிய தீங்கைப் பற்றி சிந்தித்து, குறைந்த அளவில் வெளிச்சம் இருப்பதை உறுதிபடுத்தும் வகையில், தன்னல் இயன்ற நடவடிக்கைகள் மேற்கொள்வதால், உடல் ந்ல பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.
மேலும் படிக்க | 21 நாள் நோ சுகர் சேலஞ்சுக்கு ரெடியா? இதனால் கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள்
மூளை பக்கவாதம் ஏற்படுவதற்கான முக்கிய அறிகுறிகள் (Symptoms of Brain Stroke)
1. பேசும்போது அல்லது சிரிக்கும் போது, முகத்தின் ஒரு பக்கம் தொய்வடைதல் அல்லது வாய் கோணாலாக ஆகும் நிலை
2. வார்த்தைகள் எளிதில் வராமல் பேசுவதில் தடுமாற்றம் ஏற்படலாம். விஷயங்களை புரிந்து கொள்ள முடியாமல் தெளிவில்லாமல் செயல்படலாம்.
3. திடீரென பார்வை மங்கலாகுதல் அல்லது பார்வையில் தெளிவற்ற நிலை
4. திடீரென்று ஒரு கை அல்லது ஒரு கால் பலவீனமாகவோ அல்லது மரத்துப் போவதை போன்றோ உணரலாம்.
5. திடீரென தலைசுற்றல் அல்லது நடப்பதில் சிரமம்
6. முன் எப்போதும் இல்லாத திடீரென ஏற்படும் கடுமையான தலைவலி.
மூளை பக்கவாதத்தின் அறிகுறிகள், எச்சரிக்கை ஏதும் இல்லாமல் திடீரென தோன்றும். எனவே மேலே கூறப்பட்டுள்ள அறிகுறிகளை கவனத்தில் கொள்வது மிகவும் முக்கியம். இதனால் உங்களுக்கோ அல்லது உங்களைச் சுற்றியுள்ள ஒருவருக்கோ பக்கவாதம் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவ உதவியை நாடலாம்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | Pancreas Health: டயட்டில் ‘இவற்றை’ சேருங்கள்... உங்கள் கணையம் தாங்க்யூ சொல்லும்..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ