உங்களை இயற்கை முறையில் அழகாக்கும் ரகசிய குறிப்பு!!
வேப்பிலை பல மருத்துவ குணங்கள் நிறைந்தது. வேப்பிலையை உபயோகித்து உங்களை மேலும் அழாகக்கிக் கொள்ளுங்கள்!
வேப்பிலையை அரைத்து சாப்பிட்டு வெந்நீர் குடித்தால் ரத்த சோகை குணமாகும். பூண்டை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொண்டால் ரத்த அழுத்தம் சீராகும்.
வெந்தயம், சுண்டைக்காய், மிளகு ஆகியவை ஒவ்வொன்றிலும் 50 கிராம் எடுத்து வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட உடல் எடை குறையும்.
லவங்கப் பட்டையுடன் வேப்பிலை மற்றும் மிளகு ஆகியவற்றை சம அளவில் எடுத்து அரைத்து அதிகாலையில் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிடவும். இதன் மூலம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரையும்.
பித்த பிரச்சனை மற்றும் கிருமியால் அவதிபடுபவர்கள் வேப்பம்பூவை ரசம் வைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது. அவ்வாறு சாப்பிட்டால் உடலில் ஏற்படும் அதிகப்படியான பித்தம் குறைகிந்துவிடும். உடலில் உள்ள ஒரு சிறு கிருமிகளும் அழிந்து விடும்.
வாழைத்தண்டு சாறு, பூசணிச்சாறு, அருகம்புல் சாறு மூன்றையும் சம அளவில் எடுத்துக் கலந்து கொள்ளவும். இதனை ஒருநாள் விட்டு ஒருநாள் குடித்து வந்தால் உடல் எடை குறைந்து அழகிய தோற்றம் கிடைக்கும்.
வேப்ப இலை மற்றும் ஆரஞ்சு தோல் சிறிது எடுத்துக் கொண்டு, அதனை கொதிக்கும் நீரில் போட்டு, சிறிது நேரம் ஊற வைக்கவும், பின்பு, அதை அரைத்து அத்துடன் தேன், தயிர் மற்றும் சோயா பால் சேர்த்து பேஸ்ட் போன்று செய்து, முகத்தில் தடவி, ஊற வைத்து கழுவி வந்தால், பருக்கள், வெள்ளை புள்ளிகள், கரும்புள்ளிகள், தழும்புகள் போன்றவை நீங்கிவிடும். இதனை மாதத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் நல்லது.
வேப்பம் பூவை உலர்த்தி பொடியாக்கி மஞ்சள் தூளுடன் கலந்து தேய்த்துக் குளித்து வந்தால் தோல் வியாதி நீங்கிவிடும். அந்த பொடியை அணலில் போட்டு வீடு முழுவதும் புகையை பரவ விட்டால் விஷப்பூச்சிகள், கொசு, மூட்டைபூச்சி தொல்லைகள் ஓழிந்துவிடும்.
வேப்பிலையை கொதிக்கும் தண்ணீரில் போட்டு, தண்ணீரின் நிறம் மாறும் வரை ஊற வைக்கவும். அதிலிருந்து நீரை வடித்து ஒரு பாட்டிலில் ஊற்றி, தினமும் குளிக்கும் போது, குளிக்கும் நீரில் சிறிது ஊற்றி, குளித்தால், சருமத்தில் ஏற்படும் முகப்பரு மற்றும் வெள்ளை புள்ளிகள் நீங்கிவிடும்.
வேப்பிலை சாற்றை எடுத்து மோருடன் கலந்து சாப்பிட வயிற்று பூச்சிகள் ஓழியும். வேப்பம் பூவை லேசாக வாட்டி தலையில் கட்டிக் கொண்டால் பேன், பொடுகு, ஈறு போன்றவை அகன்று விடும். வேப்பிலைக் கொழுந்தை தினமும் பச்சையாகச் சிறிதளவு மென்று வந்தால் வயிறு சம்பந்தமான தொல்லைகள் வரவே வராது.
வேப்பங்கொழுந்தை பசு மோர் விட்டு அரைத்து தீப்பட்ட புண்ணில் பூசினால் சீக்கிரம் காயம் ஆறும். வேப்பங்கொழுந்து இலையை அரைத்து ஒரு கோலி அளவு எருமை தயிரில் மூன்று நாட்கள் உள்ளுக்குள் உட்கொண்டு வந்தால்தொண்டைக்கறமல் குணமாகும்.