எச்சரிக்கை! அளவுக்கு மிஞ்சிய ஆலோவேரா இதயம் கல்லீரலை பாதிக்கும்!
கற்றாழை என்பது தரிசு நிலத்தில் முளைத்துக்கிடக்கும் தேவையற்ற ஒரு தாவரம் என்ற எண்ணம் சிலருக்கு இருக்கலாம். அது முற்றிலும் தவறு. வற்றாத ஆரோக்கியத்தையும் அள்ளித்தரும் கற்றாழையின் ஆரோக்கிய நலன்கள் எண்ணிலடங்காதவை.
கற்றாழை என்பது தரிசு நிலத்தில் முளைத்துக்கிடக்கும் தேவையற்ற ஒரு தாவரம் என்ற எண்ணம் சிலருக்கு இருக்கலாம். அது முற்றிலும் தவறு. வற்றாத ஆரோக்கியத்தையும் அள்ளித்தரும் கற்றாழையின் ஆரோக்கிய நலன்கள் எண்ணிலடங்காதவை. மருத்துவ குணங்கள் நிறைந்த, கற்றாழை (Aloe Vera) சரும பராமரிப்பு மற்றும் ஆரோக்கியம் இரண்டுக்கும் சிறந்தது கற்றாழையில் கால்சியம், குளோரின், சோடியம், பொட்டாசியம், மாங்கனீசு, வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் பி2, பாலிசாக்கரைடுகள் மற்றும் யூரிக் அமிலம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளது. எனினும் ஆலோவேராவை அதிக உட்கொண்டால் இதயம் மற்றும் கல்லீரல் பாதிக்கப்படுவதோடு, வேறு சில பல்லவிளைவுகளும் ஏற்படும்.
முதலில் கற்றாழை அதாவது ஆலோவேராவினால் ஏற்படும் நன்மைகளையும், பின்னர் அதன் அதிகப்படியான நுகர்வு ஏற்படுத்தும் பாதிப்புகளையும் அறிந்து கொள்ளலாம்.
ஆலோவேராவின் மருத்துவ நன்மைகள்
தீக்காயங்கள் ஆற கற்றாழை உதவுகிறது. தினமும் மூன்று முறை கற்றாழை ஜெல்லை எடுத்து தடவி வர தீக்காயத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் விரைவாக குணமடையும்.
சிறிய வெட்டு காயங்கள், சிராய்ப்புகளில் இருந்து விரைவாக நிவாரணம் பெற கற்றாழை ஜெல்லை தடவலாம். இதில் ஆந்த்ரோகுயினோன்கள், இரெசின்கள், பாலிசக்கரைடு மற்றும் ஆலோக்டின்பி எனும் பல வேதிப்பொருட்கள் உள்ளன. இதனால் கற்றாழை ஜெல் காயங்களை உடனடியாக குணப்படுத்த உதவுகிறது
எனினும் அளவிற்கு மிஞ்சினால் அமர்தமும் நஞ்சு
கற்றாழையில் காணப்படும் பயோ ஆக்டிவ் காம்பௌண்டுகள் கல்லீரல் செயல்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், கல்லீரல் பிரச்சினை இருந்தால், மருத்துவரின் ஆலோசனையின்றி ஆலுவேரா சாற்றை அருந்தக் கூடாது.
மேலும் படிக்க | Diabetes: கணையத்தில் இன்சுலினை இயற்கையாக சுரக்க வைக்கும் முளை கட்டிய வெந்தயம்!
உங்கள் சருமத்தில் கற்றாழை ஜெல்லை நீண்ட நேரம் வைத்திருந்தால் அது சருமத்தை வறட்சியாக்க வாய்ப்புகள் உள்ளது. எனவே, கற்றாழை ஜெல்லை பயன்படுத்திய சில நிமிடங்களுக்குப் பிறகு சருமத்தில் உலர விடாமல் தண்ணீரில் வாஷ் செய்து விடவும்.
அதிக அளவில் கற்றாழை சாறு உட்கொள்வது உடலில் பொட்டாசியம் அளவைக் குறைக்கும் என்பதால், இதை அதிக அளவு பயன்படுத்துவது ஒழுங்கற்ற இதயத் துடிப்பு பிரச்சனையை ஏற்படுத்தக்கூடும்.
Aloe Vera-வில் லேடெக்ஸ் காணப்படுகிறது. இதனால் சிலருக்கு ஒவ்வாமை (allergy) ஏற்படுகிறது. இது வயிற்று எரிச்சல், வயிற்று வலி போன்ற பல வயிற்று பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
ஆலுவேரா சாற்றை அதிக அளவிற்கு எடுத்துக் கொண்டால், நீரிழிவு நோயாளிகளுக்கு எலக்ட்ரோலைட் ஏற்றத்தாழ்வு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | கல்லீரல் பிரச்சனை அண்டாமல் இருக்க... தினசரி டயட்டில் சேர்க்க வேண்டிய உணவுகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ