Herbal Tea: உடல் எடை குறையணுமா? இந்த டீ குடிங்க போதும்
Herbal Tea: இந்த மூலிகை டீயின் நன்மைகளை பற்றி தெரிந்துகொண்டால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். உடல் எடை குறைப்பு முதல் செரிமானம் வரை இதனால் பல நன்மைகள் கிடைக்கும்.
மூலிகை டீயின் நன்மைகள்: தேநீர் என்பது நமக்கு புத்துணர்ச்சியிம் தெம்பும் அளிக்கும் ஒரு பானமாகும். இது நமது ஓயாத பணிகளுக்கு இடையில் நமக்கு கிடைக்கும் சிறிய இடைவேளயை இன்பமாக்குகிறது. இன்று இந்த பதிவில் நீங்கள் காணப்போகும் டீயின் நன்மைகளை பற்றி அறிந்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். சந்தையில் எளிதில் கிடைக்கும் மூலிகை தேநீர் பால் கொண்டு தயாரிக்கப்படும் தேநீருக்கு சிறந்த மாற்றாக அமையும். லெமன் கிராஸில் இருந்து தயாரிக்கப்படும் மூலிகை டீயின் நன்மைகள் பற்றியும் அதை எப்படி தயார் செய்வது என்பது பற்றியும் தெரிந்துகொள்ளலாம்.
செரிமானத்திற்கு நன்மை பயக்கும்
லெமன் கிராஸ், அதாவது எலுமிச்சைப் புல் செரிமானத்திற்கு மிகவும் நல்லது. மேலும், செரிமானத்தை கட்டுக்குள் வைத்திருக்கவும் இது உதவுகிறது. எலுமிச்சைப் புல்லில் சிட்ரல் என்ற கூறு உள்ளது. இது உடலில் உள்ள உணவை ஜீரணிக்க உதவுகிறது.
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது
இந்த மூலிகை தேநீர் உடலில் உள்ள நச்சுத்தன்மையை அகற்றவும் உதவுகிறது. லெமன் கிராஸ் டீயில் ஏராளமான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது உடலில் இருந்து நச்சுகளை அகற்றி சுத்தப்படுத்த உதவுகிறது.
மேலும் படிக்க | Skin Care Routine: முகப்பொலிவு வேணுமா? ரோஸ் வாட்டர இப்படி யூஸ் பண்ணுங்க
எடை குறைப்பதில் நன்மை பயக்கும்
லெமன் கிராஸ் டீ மெட்டபாலிசத்தை அதிகரிப்பதில் மிகவும் நன்மை பயக்கும். இது உடல் பருமனை குறைக்கவும் உதவுகிறது.
முடி வளர்ச்சிக்கும் நல்லது
லெமன் கிராஸ் டீ கூந்தலின் துளைகளைத் திறந்து முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. இதில் வைட்டமின் ஏ மற்றும் சி நிறைந்துள்ளது. இவை தோல் மற்றும் கூந்தல் இரண்டிற்கும் ஊட்டச்சத்துக்களாக செயல்படுகின்றன.
பல் சொத்தையை நீக்குகிறது
எலுமிச்சைப் புல் தேநீர் பல் சிதைவுக்கு காரணமான பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.
இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும்
லெமன் கிராசில் பொட்டாசியம் உள்ளது. இதன் உதவியால் சிறுநீர் அதிக அளவில் வெளியேற்றப்படுகிறது. அது இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.
லெமன் கிராஸ் டீ தயாரிப்பது எப்படி
ஒரு பாத்திரத்தில் 4 கப் தண்ணீர், 1 கப் லெமன் கிராஸ் மற்றும் 1 தேக்கரண்டி தேன் எடுத்துக் கொள்ளவும். முதலில் லெமன் கிராஸை தண்ணீரில் கழுவி சிறு துண்டுகளாக நறுக்கி அரைக்கவும். இப்போது ஒரு பாத்திரத்தில் தண்ணீரைச் சூடாக்கி, லெமன் கிராசை இந்த தண்ணீரை 10 நிமிடம் கொதிக்க வைத்து, ஒரு கோப்பையில் வடிகட்டி, அதில் தேன் சேர்த்து, இந்த டீயை சூடாக குடித்து சுவையை அனுபவிக்கவும்.
மேலும் படிக்க | உடல் எடையை துரிதமாக குறைக்க வழி! தினமும் 16 மணி நேர பட்டினி இருக்க முடியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ