Raw Banana: நீரிழிவு முதல் உடல் பருமன் வரை... வியக்க வைக்கும் வாழைக்காய்..!
Health Benefits of Raw Banana: நன்றாக பழுத்த வாழைப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி நாம் அனைவருமே கேள்விப்பட்டிருப்போம். ஆனால் வாழைக்காயும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
Health Benefits of Raw Banana: வாழைப்பழம் நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளது என்பது அனைவரும் அறிந்தது தான். நம் உடலை வலுப்படுத்த அல்லது பலவீனத்தை போக்க வாழைப்பழத்தை தினசரி சாப்பிடுவது நல்லது என உணவியல் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். நன்றாக பழுத்த வாழைப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி நாம் அனைவருமே கேள்விப்பட்டிருப்போம். ஆனால் வாழைக்காயும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? பல்வேறு சத்துக்கள் நிறைந்த வாழைக்காயை உட்கொள்வதன் மூலம் பல நோய்கள் வராமல் தடுக்கலாம். சிலர் வாழைப்பழத்தை வேக வைத்து, பொரியலாக சமைத்து சாப்பிட விரும்புகிறார்கள். சிலர் சிப்ஸ் செய்து சாப்பிட விரும்புகிறார்கள். அந்த வகையில் வாழைக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பல நோய்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
நீரிழிவு நோய்க்கு அருமருந்தாகும் வாழைக்காய்
சர்க்கரை நோயாளிகளுக்கு வாழைக்காய் ஒரு சஞ்சீவி எனலாம். நீரிழிவு உள்ளவர்கள் இதை உட்கொண்டால், சர்க்கரை அளவை சிறப்பாக (Diabetes Control Tips) கட்டுப்படுத்தலாம். வாழைக்காயின் கிளைசெமிக் குறியீடு மிகவும் குறைவாக உள்ளது. மேலும் இது நமது இன்சுலின் ஹார்மோன் உற்பத்தியை தூண்வதன் மூலம் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. எனவே இதனை உணவில் சேர்த்துக் கொண்டால் இரத்த சர்க்கரையின் அளவை எளிதில் கட்டுப்படுத்தலாம்.
இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் வாழைக்காய்
வாழைக்காயில் உள்ள பொட்டாசியம் நமது இரத்த அழுத்த அளவைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவும். இதன் காரணமாக இதயம் தொடர்பான பல்வேறு பிரச்சனைகளில் இருந்தும் நம்மை காக்கிறது. தினமும் வாழைக்காயை உணவில் சேர்த்து வந்தால், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்கள் வரும் ஆபத்து பெருமளவு குறைக்கிறது. உங்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க விரும்பினால், வாழைக்காயை உணவில் தவறாமல் சேர்த்து உட்கொள்ளத் தொடங்குங்கள்.
உடல் பருமனை குறைக்கும் வாழைக்காய்
வாழைக்காய் உங்கள் எடையைக் குறைக்க பெரிதும் உதவுகிறது. இதற்குக் காரணம் இதில் உள்ள நார்ச்சத்து. வாழைக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும். நீண்ட நேரம் வயிறு நிறைந்ததாக உணர்வைத் தருவதாக், தேவையில்லாமல் சாப்பிடுவதையும் தவிர்க்கலாம். எனவே உங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், தினமும் வாழைக்காயை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
செரிமானத்தை வலுப்படுத்தும் வாழைக்காய்
வாழைக்காயில் உள்ள அதிக அளவு நார்ச்சத்து, வயிற்று உப்புசம், அஜீரணம், வாயு, மலச்சிக்கல் போன்ற செரிமானம் தொடர்பான கோளாறுகளை குணப்படுத்த உதவுகிறது. அதுமட்டுமல்லாமல், இதனை தொடர்ந்து சாப்பிடுவது நமது ஜீரண சக்தியையும் பலப்படுத்துகிறது.
வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் வாழைக்காய்
வாழைக்காயில் வைட்டமின்-சி, வைட்டமின்-பி, வைட்டமின்-கே, வைட்டமின்-ஈ போன்ற பல சத்துக்கள் உள்ளன. இது நம் உடலின் வளர்ச்சிதை மாற்றம் என்னும் மெட்டாபாலிஸத்தை அதிகரிக்க உதவுகிறது. நமது வளர்சிதை மாற்றம் சிறப்பாக இருந்தால், உடல் எடை கட்டுக்குள் இருக்கும் என்பதோடு, பல நோய்கள் நம்மை அண்டாது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ