Health News: அன்னாசிப் பழத்தின் அள்ள அள்ள குறையாத அற்புத நன்மைகள் இதோ!!
உடலுக்கு பல வித நன்மைகளை அள்ளித் தரும் பழ வகைகளில் அன்னாசிப்பழமும் ஒன்றாகும். அன்னாசிப்பழத்தில் அதிகப்படுயான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன.
புதுடில்லி: உடலுக்கு பல வித நன்மைகளை அள்ளித் தரும் பழ வகைகளில் அன்னாசிப்பழமும் ஒன்றாகும். அன்னாசிப்பழத்தில் அதிகப்படுயான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன.
அன்னாசிப்பழம் சுவையாக இருப்பதோடு மட்டுமல்லாமல், உடலின் ஆரோக்கியத்தை பேணிக்காக்கும் பல பண்புகளும் இதில் உள்ளன. இவற்றில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் அதெரோஸ்கிளெரோஸிஸ் எனப்படும் பெருந்தமனி தடிப்பு, இதய நோய்கள் மற்றும் பல்வேறு புற்றுநோய்களுக்கு எதிராக போராட உதவுகின்றன.
ருசியும் ரசமும் நிறைந்த இந்த அன்னாசிப்பழத்தின் ஏராளமான நன்மைகளில் முக்கியமான சிலவற்றை இங்கே காணலாம்:
- அன்னாசிப்பழத்தில் (Pineapple) அதிகமான மாங்கனீசு இருப்பதால், வலுவான எலும்புகளின் உருவாக்கத்தில் இந்த பழம் உதவும்.
- அன்னாசிப்பழச்சாறு நமது ஈறுகளின் ஆரோக்கியத்தை வலுப்படுத்துவதோடு பற்களை வலுவாக வைத்திருக்கவும் உதவுகிறது.
- அன்னாசிப்பழத்தில் பீட்டா கரோட்டின் நிரம்பியுள்ளதால், இது மாகுலர் சிதைவை எதிர்த்துப் போராட உதவுகிறது.
- அன்னாசிப்பழத்தில் அதிக நார்சத்தும் குறைந்த கலோரிகளும் உள்ளதால், இது உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
- அன்னாசிப்பழம் வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கிறது. கூந்தல், தோல் மற்றும் நகங்களின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்தை அன்னாசிப்பழம் வழங்குகிறது.
ALSO READ: பல வலிகளை போக்க கூடிய கிராம்பின் மருத்துவ பயன்கள் என்ன
அன்னாசி பழத்தால் ஏற்படக்கூடும் பாதிப்புகள்:
- அன்னாசிப்பழத்தில் இயற்கையாக சர்க்கரை அளவு அதிகமாக உள்ளது. ஆகையால், இது சர்க்கரை நோய் (Diabetes) உள்ளவர்களுக்கு நல்லதல்ல.
- அன்னாசி பழத்தில் உள்ள ப்ரோம்லைன் நாம் உண்ணும் சில மருந்துகளோடு சேரும் போது தீய விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். ஆகையால், மருந்து மாத்திரை உட்கொள்பவர்கள் மிகுந்த கவனத்துடன் இதை உட்கொள்ள வேண்டும்.
- முழுமையாக பழுக்காத அன்னாசி பழத்தை சாப்பிட்டாலோ அல்லது அதை பழரசமாக குடித்தாலோ அது ஆபத்தை ஏற்படுத்தலாம்.
- அன்னாசி பழத்தை அதிகமாக உட்கொண்டால் பற்களில் கரை படியும். இது பற்களின் எனாமலின் மீதும் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும்.
- அனாசி பழத்தில் அதிக அளவிலான அமிலத்தன்மை உள்ளதால், இதை சாப்பிடுவதால் சிலருக்கு லேசான அலர்ஜி (Allergy), வயிற்று எரிச்சல் ஆகியவை ஏற்படலாம்.
ALSO READ: பற்களில் குழி உருவாவதைத் தடுக்க ஒரு சில எளிய வழிமுறைகள்; உங்களுக்காக...
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR