Anti Aging: வயசானாலும் முகமும் பொலிவும் அப்படியே இருக்க இந்த பழச்சாறுகள் போதும்
Anti Aging Drinks: சில இயற்கையான உணவுகளின் மூலம் உடலையும், குறிப்பாக முகத்தை நீண்ட காலத்துக்கு இளமையாக ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம்.
ஆண்டி ஏஜிங் ஜூஸ்: அவசர வாழ்க்கை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்களால், நாம் அடிக்கடி டென்ஷனுக்கு ஆளாகிறோம். அதன் விளைவு நம் முகத்தில் தெரிய ஆரம்பிக்கிறது. சத்துக்கள் இல்லாததாலும், உடலில் மாசு ஏற்படுவதாலும் முகத்தில் முதுமையும் தெரிகிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், நீங்கள் உங்கள் சருமத்தை முழுமையாக நல்ல முறையில் கவனித்துக் கொள்ள வேண்டும். தினசரி உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் ஆண்டி ஏஜிங் அதாவது மூப்பு எதிர்ப்பு செயல்முறை துரிதப்படுத்தப்படும். சில இயற்கையான உணவுகளின் மூலம் உடலையும், குறிப்பாக முகத்தை நீண்ட காலத்துக்கு இளமையாக ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம். நமக்கு வயதானாலும், இளமையான முகத்தை அளிக்கக்கூடிய ஐந்து பழரச வகைகளை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
சிறந்த ஆண்டி ஏஜிங் ஜூஸ்கள்
1. கேரட் சாறு
கேரட் ஒரு ஆண்டி ஆக்சிடெண்டாக செயல்படுகிறது. இதில் அதிக அளவு லுடீன் காணப்படுகிறது. இது மூளைக்கு நன்மை பயக்கும். கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் உடல் ஆரோக்கியத்துக்கு அதிகப்படியான நன்மைகளை அளிக்கிறது. கேரட்டை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், சருமத்தின் பொலிவு அப்படியே இருக்கும்.
2. மாதுளை சாறு
மாதுளையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாலிஃபீனால்கள் சருமத்திற்கு நன்மை பயக்கும் என்பதால் இது ஒரு ஆரோக்கியத்தின் பொக்கிஷமாக கருதப்படுகிறது. இது தவிர மாதுளம்பழம் புற்று நோயை தடுக்கிறது, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.
மேலும் படிக்க | பற்கள் மஞ்சளா இருக்கா: இப்படி பண்ணி பாருங்க, முத்து போல் பற்கள் பளபளக்கும்
3. திராட்சை சாறு
கருப்பு திராட்சையில் கரோட்டினாய்டு சேர்மங்கள் உள்ளன. அதன் சாற்றை தொடர்ந்து குடித்து வந்தால், அது ஆண்டி ஏஜிங் பானமாக செயல்படுகிறது. இது தவிர, உடலில் உள்ள நல்ல கொழுப்பின் அளவை இது அதிகரிக்க உதவுகிறது. இதன் காரணமாக இதயம் தொடர்பான நோய்களும் நீக்கப்படுகின்றன.
4. பீட்ரூட் சாறு
பீட்ரூட் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இதன் சாறு உடலின் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது. இதை குடிப்பதால் வயதாகும் செயல்முறை குறைகிறது, முகத்தில் வயதின் தாக்கத்தை குறைக்க இது உதவுகிறது.
இவற்றைத் தவிர முதுமையிலும் இளமையாக தெரிய, இந்த ஐந்து பொருட்களை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளலாம்:
- தயிர்
- மீன்
- தர்பூசணி
- வெள்ளரிக்காய்
- அவகோடா
மேலும் படிக்க | Weight Loss Foods: உடல் எடை இழப்புக்கு எது சிறந்தது, பாலா அல்லது தயிரா
(துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR