உங்கள் உச்சந்தலையை பொடுகுத் தொல்லையில் இருந்து மீட்க இயற்கை வைத்தியன்
ஒவ்வொருவரும் தங்கள் கூந்தல் வலுவாகவும், எப்போதும் பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், கற்றாழை உங்கள் எல்லா பிரச்சனைகளையும் சமாளிக்க உதவும்.
ஒவ்வொருவரும் தங்கள் கூந்தல் வலுவாகவும், எப்போதும் பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதற்காக, பல வகையான ஷாம்புகள், ஹேர் மாஸ்க்குகள் மற்றும் பல்வேறு வகையான முடி பராமரிப்பு பொருட்கள் பயன்படுத்துகிறோம். ஆனால் அதனால் எந்த பலனும் இருப்பதில்லை. அத்தகைய சூழ்நிலையில், கற்றாழை இது போன்ற பிரச்சனைகளை அசால்ட்டாக சமாளிக்க உதவும். ஆம், கற்றாழை ஜெல்லை தலைமுடியில் தடவுவது உச்சந்தலையில் ஊட்டமளிக்கிறது மற்றும் முடி உதிர்வதை நிறுத்துகிறது. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் தலைமுடியில் கற்றாழை ஜெல்லை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
கற்றாழை ஜெல்லை முடிக்கு தடவுவதால் கிடைக்கும் நன்மைகள்-
* ஷாம்புக்கு முன் கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்துவதன் மூலம், அது உச்சந்தலையில் ஊட்டமளிக்கிறது, இது முடி உதிர்தல் மற்றும் உடைவதைத் தடுக்கும். அதே சமயம் முடி உதிர்தல் பிரச்சனையால் பலர் சிரமப்படுகின்றனர், அத்தகைய சூழ்நிலையில் கற்றாழை ஜெலை தொடந்து பயன்படுத்தி வந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும். வாரத்தில் 3 நாட்கள் தடவினால், முடி உதிர்தல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
மேலும் படிக்க | இள நரை பிரச்சனையா... உங்கள் டயட்டில் சேர்க்க வேண்டிய ‘முக்கிய’ உணவுகள்!
* ஷாம்புக்கு முன் கற்றாழை ஜெல்லை முடிக்கு தடவினால், உச்சந்தலையில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும், இது முடியை பலப்படுத்துகிறது, மேலும் உங்களின் தலைமுடி மெல்லியதாகவும், உயிரற்றதாகவும் இருந்தால், கற்றாழை ஜெல்லை வாரத்திற்கு 2 நாட்கள் தடவலாம். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் முடி அடர்த்தியாகவும் வலுவாகவும் இருக்கும்.
* குளிர்காலத்தில், ஷாம்புக்கு முன் கற்றாழை ஜெல்லைத் தடவினால் பொடுகுத் தொல்லையிலிருந்து விடுபடலாம்.
* ஷாம்பூவுக்குப் பிறகு கற்றாழை ஜெல்லை முடிக்கு தடவினால், அது கண்டிஷனராக செயல்படுகிறது. இதன் காரணமாக கூந்தலுக்கு ஊட்டச்சத்து கிடைப்பதோடு, கூந்தலில் ஈரப்பதம் இருக்கும்.
ஷாம்பு போடுவதற்கு முன், கற்றாழை ஜெல்லை முடியில் தடவவும்
கூந்தல் தொடர்பான பிரச்சனைகளை நீக்க, கற்றாழை ஜெல்லை எலுமிச்சை சாறு மற்றும் தேங்காய் எண்ணெயுடன் கலந்து, ஷாம்பு செய்யும் முன், தலையில் தடவி, 15 நிமிடம் கழித்து, தலைமுடியை நன்கு ஷாம்பு செய்து அலசவும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ஜீ மீடியா இதை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | குச்சிக் கிழங்கை இப்படி சாப்பிட்டு பாருங்க! ஒல்லிக் குச்சி உடம்பு கேரண்டி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ