உருளைக் கிழங்கை சாப்பிடாமல் இருப்பவர்கள் யாராவது இருப்பார்களா? எளிதாகவும் வேகமாகவும் ஒரு பொறியலை அல்லது குழம்பை இதில் தயார் செய்துவிட முடியும். நொறுக்குத் தீனி பிரியர்களாக இருந்தால் சிப்ஸ் செய்தும் சாப்பிடலாம்.  ஆனால், உருளைக்கிழங்கு ஆரோக்கியமானதா இல்லையா என்பது பரவலாக ஒரு சந்தேகம் உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏனென்றால் இதில் அதிக கார்போஹைட்ரேட் மற்றும் அதிக கிளைசெமிக் உள்ளது. இதை சாப்பிடும்போது இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.  மற்றபடி, உருளைக்கிழங்கு ஆரோக்கியமானது மற்றும் சத்தானது. நார்ச்சத்து, பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி6 உள்ளிட்ட நன்மை தரும் சத்துக்கள் அவற்றில் உள்ளன. 


மேலும் படிக்க | உருளைக்கிழங்கு சாப்பிட்டால் உடல் எடை குறையுமா..?


உருளைக்கிழங்கு பொறுத்தவரையில் ஆரோக்கியமானது அல்லது ஆரோக்கியமற்றது என்பதை நீங்கள் அவற்றை எப்படி சமைக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. எடுத்துக்காட்டாக- பிரஞ்சு உருளைக் கிழங்கு பொரியல்கள், அவை சாதாரண வேகவைத்த உருளைக்கிழங்கைப் போல சத்தானவை அல்ல. நீங்கள் ஆரோக்கியமான முறையில் உருளைக்கிழங்கை சாப்பிட விரும்பினால், அவற்றை வறுக்காமல், வேகவைத்து சமைத்து சாப்பிடுவது நல்லது. இதில் இருக்கும் கார்போஹைட்ரேட்டைப் பொறுத்த வரையில், அது உண்மையில் நன்மை பயக்கும். 


கார்போஹைட்ரேட்டுகள் மூளை மற்றும் உடலுக்கு ஆற்றலின் முக்கிய ஆதாரமாகும், குறிப்பாக அதிக தீவிரம் கொண்ட உடற்பயிற்சி செய்பவர்கள் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது முக்கியம். புரதங்கள் மற்றும் கொழுப்புகளை விட கார்போஹைட்ரேட்டுகள் விரைவாக செரிக்கப்படுகின்றன மற்றும் உறிஞ்சப்படுகின்றன. நீங்கள் அவற்றை எப்படி சமைக்கிறீர்கள் என்பதுடன், உங்கள் உருளைக்கிழங்கை எதனுடன் இணைக்கிறீர்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். எனவே, சீஸ் அல்லது மயோ போன்ற அதிக கலோரி கொண்டவற்றுடன் சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்கலாம்.


தினமும் உருளைக்கிழங்கு சாப்பிட ஆரம்பித்தால் என்ன நடக்கும்?


தினமும் ஒரு உருளைக்கிழங்கு சாப்பிடுவது உங்களுக்கு நன்மை பயக்கும். சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, நீங்கள் அதை வறுக்காமல் அல்லது கொழுப்பு உள்ள பொருட்களுடன் கலக்காமல் இருந்தால், அது உங்கள் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். உருளைக்கிழங்கில் உள்ள பொட்டாசியம் தசை செயல்பாட்டை ஒழுங்குபடுத்துகிறது. இதயம் பொட்டாசியம் தேவைப்படும் முக்கியமான தசையாகும்.


மேலும் படிக்க | தொங்கும் தொப்பை தொல்லை செய்கிறதா? 'இந்த' தண்ணீர் டெய்லி குடிங்க


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ