புகையிலை என்பது, நிகோடியானா டொபாக்கம் என்ற புகையிலைச் செடியிலிருந்து உருவாக்கப்படும் ஒரு பொருள். இந்தச் செடியின் இலைகளை உலர்த்தி, வேறு சில பொருள்களுடன் சேர்த்து பீடிகள், சிகரெட்கள், மூக்குப்பொடி, கட்டுபீடி, ஜர்தா போன்ற பல பொருள்களைத் தயாரிக்கிறார்கள்.இன்னும் சுமார் 4000 மற்ற வேதிப்பொருள்கள் வெளிப்படுகின்றன


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிக அளவு சிகரெட் பிடிப்பவர்கள் அப்பழக்கத்தை கைவிட முடியாமல் தினமும் ஒரு சிகரெட்டாவது பிடித்து வருகிறார்கள். அதனால் உடலுக்கு எந்தவித தீமையும் ஏற்படாது என கருதுகின்றனர்.


ஆனால், புதிய ஆய்வில் தினமும் ஒரு சிகரெட் பிடித்தாலும் கூட இருதயம் பலவிதமான நோய்களால் பாதிப்படையும், பின்னர் அதுவே வயதான காலத்தில் பக்கவாதத்தை ஏற்படுத்தும் என்றும் புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினசரி 20 சிகரெட் புகைப்பவர் அதை கைவிட்டு ஒரு சிகரெட்டுக்கு மாறினாலும் மரணத்தை ஏற்படுத்தும். இருதய நோய்களை உருவாக்கும்.


எனவே இருதய நோய்களில் இருந்து தப்பிக்க சிகரெட் பிடிக்க எந்த ஒரு வரையறையும் இல்லை என அறிவியல் இதழில் நிபுணர்கள் ஆய்வு கட்டுரை வெளியிட்டுள்ளனர். 


அதே நேரத்தில் தினமும் ஒரு சிகரெட் பிடிக்கும் ஆண்களில் 48 சதவீதம் பேரும் பெண்களில் 57 சதவீதம் பேரும் இருதய நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.


மேலும் ஆண்களில் 25 சதவீதம் பேரும், பெண்களில் 31 சதவீதம் பேரும் பக்கவாதத்தால் அவதிப்படுகின்றனர் என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலை நாடுகளில் பரவியுள்ளதுபோல் இந்தியாவிலும் சிகரெட் புகைக்கும் பழக்கம் அதிகரித்துவருகிறது.


கடந்த சில ஆண்டுகளில் மட்டும் சிகரெட் வர்த்தகம் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது எனும் புள்ளிவிவரமே இதற்குச் சாட்சியளிகிறது.