Asafoetida Benefits: நோயற்ற வாழ்விற்கு... தினமும் ஒரு சிட்டிகை பெருங்காயம் போதும்..!!
Asafoetida Powder Helps To Cure Digestive Problems: உணவுக்கு நறுமணத்தை கொடுக்க உபயோக்கிக்கப்படும் பெருங்காயத்தில் எண்ணற்ற ஆரோக்கிய நலன்கள் உள்ளன. உணவில் சுவையை சேர்க்கும் இந்த மசாலா உங்கள் ஆரோக்கியத்திற்கு எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
Asafoetida Powder Helps To Cure Digestive Problems: சமையலில் பெருங்காயத்தை மிக அதிக அளவில் பயன்படுத்தும் நாடு இந்தியா. ஆனால் இந்தியாவில் பெருங்காயம் விளைவிக்கப்படுவதில்லை என்பது ஆச்சரியமான தகவலாக இருக்கும். இங்குள்ள தட்பவெட்பநிலை பெருங்காயம் விளைவிக்க சாதகமாக இல்லை என்பதால், இந்தியாவில் பயன்படுத்தும் பெருங்காயத்தில் சுமார் 90%, ஈரான், ஆப்கானிஸ்தான், துர்கிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. எனினும், பலவித ஆய்வுகளுக்கு பிறகு, தற்போது, இமாச்சல பிரதேச மாநிலத்தின் சில பகுதிகளில் பெருங்காய செடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
பெருங்காயம் ஆரோக்கிய நன்மைகள்
உணவுக்கு நறுமணத்தை கொடுக்க உபயோக்கிக்கப்படும் பெருங்காயத்தில் எண்ணற்ற ஆரோக்கிய நலன்கள் உள்ளன. ஒரே ஒரு சிட்டிகை உணவின் நறுமணத்தையும் சுவையையும் இரட்டிப்பாக்குகிறது. பெருங்காயம் வாசனைக்காக மட்டும் பயன்படுத்தப்படுவதில்லை. அது உங்கள் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. உணவில் சுவையை சேர்க்கும் இந்த மசாலா உங்கள் ஆரோக்கியத்திற்கு (Health Tips) எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
செரிமானத்தை மேம்படுத்தும் பெருங்காயம்
வீட்டு வைத்தியத்தில் பெருங்காயம், செரிமானம் தொடர்பான கோளாறுகளில் இருந்து நிவாரணம் பயன்படுத்தப்படுகிறது. வாயு தொல்லை, வயிறு உப்பிசம் என, பல வகைகளில் பெருங்காயம் நிவாரணத்தை கொடுக்கும். உங்கள் செரிமான அமைப்பு பலவீனமாக இருந்தால், அதை மேம்படுத்த பெருங்காயம் உதவும். பெருங்காய நீர் செரிமானத்தை மேம்படுத்துவதோடு, நச்சு பொருட்கள் உடலில் இருந்து அகற்ற உதவும். பெருங்காயத்தை தண்ணீரில் கரைத்து குடித்தாலே, செரிமான பிரச்சனைகள் அனைத்தும் தீரும். குடல் ஆரோக்கியத்திற்கு தேவையான என்சைம்களின் செயல்பாடுகளை பெருங்காயம் தூண்டுவதால் இரைப்பை தொடர்பான பிரச்சனைகள் குணமாகிறது. வயிற்றில் வீக்கம், வலி, குடல் புண் போன்ற பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமைகிறது.
இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் பெருங்காயம்
பெருங்காயத்தில் உள்ள சில தனிமங்கள் இரத்தம் உறைவதைத் தடுக்கின்றன. இதனுடன், உங்கள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இதனால் உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகளுக்கு மாமமருந்தாக அமைகிறது.
மேலும் படிக்க | எலும்பு ஆரோக்கியத்தை வலுவாக்கும் அற்புத பானங்கள்: குடித்தால் குஷியாக வாழலாம்
உடல் பருமனை குறைக்கும் பெருங்காயம்
பெருங்காய நீர், வளர்சிதை மாற்றத்தை வலுப்படுத்தி எடை இழப்புக்கு உதவுகிறது. வளர்ச்சிதை மாற்றம் என்னும் மெட்டபாலிஸம் சிறப்பாக இருந்தால் தான் உடை இழப்பு சாத்தியம் என்பது குறிப்பிடத்தக்கது. வளர்ச்சிதை மாற்றத்தை தடுக்கும் சில என்சைங்களின் செயல்பாடுகளை பலவீனம் ஆக்குவதன் மூலம் கல்லீரலையும் பாதுகாக்கிறது.
தலைவலியிலிருந்து நிவாரணம் அளிக்கும் பெருங்காயம்
அடிக்கடி ஏற்படும் தலைவலி பிரச்சனைக்கு தீர்வை பெற பெருங்காய நீர் உதவும். பெருங்காயத்தில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் தலைவலி பிரச்சனையிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. இதனுடன், இரத்த அணுக்களில் ஏற்படும் வீக்கத்தையும் குறைக்கிறது.
மன அழுத்தத்தை போக்கும் பெருங்காயம்
பெருங்காயம் மன அழுத்த நோய்க்கு மருந்தாக அமையும் என ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகின்றனர். மன அழுத்தத்தினால் ஏற்படும், தூக்கமின்மை, கருவுறாமை பிரச்சனை ஆகியவற்றிற்கு சிறந்த நிவாரணியாக பெருங்காயம் இருக்கும். மேலும் உடலில் ஏற்படும் பதற்றம், நடுக்கம் ஆகியவற்றை தீர்க்கும் ஆற்றல் உள்ளதாகவும் ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மாதவிடாய் பிரச்சனைகளுக்கு தீர்வைத் தரும் பெருங்காயம்
பெருங்காயத்திற்கு ஹார்மோன் அளவை சீராக்கும் திறன் உள்ளதால், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கு போன்ற பிரச்சனைகள் தீரும். மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் வயிற்று வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும். பெண்கள் பிரச்சனையை தீர்ப்பது போல், ஆண்களின் ஆண்மை குறைவு பிரச்சனையையும் தீர்க்கும் ஆற்றல் பெருங்காயத்திற்கு உண்டு.
வீட்டு வைத்தியமாக பெருங்காயத்தை பயன்படுத்தும் முறை
கை வைத்தியமாக பெருங்காயத்தை பயன்படுத்த, பெருங்காயத்தை தண்ணீரில் சேர்த்து தினமும் குடித்து வரலாம். பெருங்காய நீர் தயாரிப்பது மிகவும் எளிது. ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரை எடுத்து அதில் இரு சிட்டிகை பெருங்காயத்தை சேர்க்கவும். இந்த தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Yoga For Diabetes: இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் சூப்பர் யோகாசனங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ