தனது சருமத்தை பிய்த்து தின்ற தூண்டும் கொடிய போதைப்பொருளான cannibal-ன் தாக்கம் இங்கிலாந்தில் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலகின் கொடிய தன்மை கொண்ட Cannibal போதைப் பொருள் தற்போது இங்கிலாந்து இளைஞர்களையும் அடிமையாக்கியுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றது. ஹராயினை விடவும் 10 மடங்கு அதிக போதைத் தன்மை கொண்ட Cannibal கடந்த 2016-ஆம் ஆண்டு உலகின் கொடிய போதைப்பொருள் என அறிவிக்கப்பட்டது.


பார்ப்பதற்கு பிளாக்கா எனப்படும் சாதான வேதி உப்பு போன்று காணப்படும் இந்த போதை வஸ்து, மிக மளிவான விலையில் கிடைப்பதாலும், தனது அபார போதை மயக்கத்தாலும் உலக அளவில் இளைஞர்களை அடிமையாக்ககி வருகின்றது.


இந்த போதைப்பொருளின் தன்மை, பூர்விகம் எதுவென்று சரிவர தெரியாத நிலையில், இது சீனா-வில் இருந்து வந்திருக்கலாம் எனவும், பூனையின் சிறுநீர் நாற்றத்தினை கொண்டிருக்கும் எனவும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.


ரஷ்யா, உக்ரைன் என பல நாடுகளை ஆட்டிப்படைத்த இந்த போதை வஸ்த தற்போது இங்கிலாந்தில் பிரபலமாகி வருகின்றது. கடந்த ஆண்டில் மட்டும் இந்த Cannibal பயன்படுத்தி குற்றச்செயல்களில் ஈடுப்பட்டதாக 950 பேர் பிடிப்பட்டுள்ளனர்.


இந்த Cannibal உட்கொள்ளும் நபர்கள் தன்னை மறந்து, நரமாமிசம் தேடிச்செல்லும் அளவிற்கு ஆளவார் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு ஆதாரமாய் மருத்துவர்கள் எடுத்து வைப்பது., 2012-ஆம் ஆண்டு நிகழ்ந்த ஒரு நிகழ்வினை தான். Cannibal -னை அதிக அளவில் உட்கொண்ட ருடி எக்னே என்பவர், தனது கண்விழியினை பிடுங்கி உண்டுள்ளார். சீனா-வை சேர்ந்த பெண்மனி ஒருவர் தனது காலின் சதைகளை படிப்படியாக தின்று வந்துள்ளார். நீண்ட நான் சிகிச்சைக்கு பின்னர் அவரை மருத்துவர்கள் இந்த போதை பழக்கத்தில் இருந்து மீட்டுள்ளனர்.



சமீபத்தில் ப்ளோரிடாவை சேர்ந்த 32-வயது கேமிலா பெல்லா, தனது தாயின் கண்னை பிடுங்கி விழுங்கியுள்ளார் என பிரபல ஆங்கில பத்திரிக்கை செய்திகளை வெளியிட்டுள்ளது.



Cannibal-வின் உச்சக்கட்டம்... ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த 41-வயது ஆண் லூயிஸ் கிலிண்டன், சுயநினைவினை இழந்து மரத்துடன் உடலுறவு வைக்க முற்பட்டுள்ளார். இச்சம்பவத்தினை அடுத்து இவர் உள்ளூர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.



மனிதர்களை மிருகமாய் மாற்றி வரும் Cannibal போதைப் பொருளை தடுக்கும் நடவடிக்கைளை இங்கிலாந்து காவல்துறை முழுவீச்சில் நடத்தி வருகின்றது.