வாழைப்பழம் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ள பழமாகும். வாழைப்பழத்தில் எண்ணற்ற வகைகள் உள்ளன. இதில் வைட்டமின் பி6, நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. கற்பூரவள்ளி, பூவன் பழம், செவ்வாழை, ரஸ்தாளி, பச்சைப்பழம், மலைப்பழம், பேயன் பழம், மொந்தம் பழம், ஏலக்கி போன்ற பல வகைகளில் வாழைப்பழம் கிடைக்கிறது. ஒரு பழுத்த வாழைப்பழத்தில்  இன்றியமையாத பொட்டாஷியம் சத்து நிறைந்துள்ளது. எலும்புகளையும் தசைகளையும் உற்பத்தி செய்ய ஒரு நாளைக்குத் தேவைப்படும் பொட்டாசியத்தின் அளவில் 11 சதவிகிதம் வாழைப்பழத்தில் உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வாழைப்பழம் வயிற்றுக்கு புரோபயாடிக் போல் செயல்படுகிறது. இது செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது, இதன் மூலம் வயிற்று பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. அதுமட்டுமின்றி வாழைப்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு எண்ணற்ற ஆற்றல் கிடைக்கும். தினமும் ஒரு பழுத்த வாழைப்பழத்தை சாப்பிட்டுவந்தால் இரத்த அழுத்தம், சிறுநீரகக் கற்கள், முழங்கால் வலி மற்றும் இதய நோய்கள் வராமல் தடுக்கும்.


ஆனால் வாழைப்பழத்துடன் சிலவற்றை சேர்த்து உட்கொள்ளக்கூடாது என்பது உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் வாழைப்பழத்தை அதனுடன் கூட்டணி  சேராத உணவு பொருட்களுடன் உட்கொண்டால், அது நன்மைக்கு பதிலாக உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். வாருங்கள், வாழைப்பழத்தை (Banana) எந்தெந்த பொருட்களுடன் உட்கொள்ளக்கூடாது என்பதை அறிந்து கொள்ளலாம்.


வாழை மற்றும் சிட்ரஸ் பழங்கள்


ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சைப்பழம் போன்ற சிட்ரஸ் அமிலம் நிறைந்த புளிப்புப் பழங்களுடன் வாழைப் பழத்தை உட்கொள்ளக் கூடாது. இது உங்கள் செரிமான அமைப்பில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். உண்மையில், சிட்ரஸ் பழங்களில் இருக்கும் அமிலம் உங்கள் வயிற்றில் அமிலத்தன்மையின் அளவை அதிகரிக்கும். இதனால் வயிற்று வலி, அசிடிட்டி, தலைவலி போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.


வாழை மற்றும் தண்ணீர்


வாழைப்பழம் சாப்பிடும் போதோ அல்லது வாழைப்பழம் சாப்பிட்ட உடனேயோ தண்ணீர் குடிக்கக் கூடாது. வாழைப்பழம் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிப்பதால் சளி, இருமல் ஏற்படும். கூடுதலாக, வயிறு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படலாம். எனவே வாழைப்பழம் சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்துதான் தண்ணீர் குடிக்க வேண்டும்.


மேலும் படிக்க | சுகர் லெவல் குறைய.. இந்த மேஜிக் பானங்கள் உதவும்!! குடிச்சி பாருங்க


வாழைப்பழம் மற்றும் முட்டை


வாழைப்பழம் மற்றும் முட்டையை ஒன்றாக சாப்பிடக் கூடாது. உண்மையில், வாழைப்பழத்தின் தன்மை குளிர்ச்சியாகவும், முட்டையின் தன்மை சூடாகவும் உள்ள நிலையில் இவை இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும். கூடுதலாக, கப தோஷமும் உடலில் அதிகரிக்கலாம்.


வாழைப்பழம் மற்றும் தயிர்


வாழைப்பழம் மற்றும் தயிர் சேர்த்து சாப்பிடக்கூடாது. இது உடலுக்கு ஒரு மோசமான உணவு கலவையாகும். வாழைப்பழம் மற்றும் தயிர் சேர்த்து சாப்பிடுவதால் வயிற்று உப்புசம் மற்றும் செரிமான பிரச்சனைகள் ஏற்படும். வாழைப்பழம் சாப்பிட்டு சுமார் 2 மணி நேரம் கழித்து தான் தயிர் சாப்பிட வேண்டும்.


வாழைப்பழம் மற்றும் பால்


பெரும்பாலானோருக்கு பால் மற்றும் வாழைப்பழத்தை ஒன்றாக சேர்த்து சாப்பிம் பழக்கம் உள்ளது. ஆனால் இஇவை இரண்டையும் சேர்த்து சாப்பிடுவது உடல் நல பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பது பலருக்கு தெரிவதில்லை . வாழைப்பழம் மற்றும் பால் சேர்த்து சாப்பிடுவதால் உடலில் நச்சுகள் உருவாகும். இதன் காரணமாக நீங்கள் வயிற்று வலி மற்றும் பிற செரிமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.


மேலும் படிக்க | Weight Loss Tips: உடல் பருமனை ஓட ஓட விரட்ட.. பப்பாளியை இப்படி சாப்பிட்டு பாருங்க


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ