நீங்கள் நீண்ட காலமாக டயட்டில் இருந்தும், உடல் பருமனை குறைக்க முடியவில்லையா? நீங்கள் ஒருவேளை சில பொதுவான தவறுகளை செய்து இருக்கலாம். அந்த தவறுகளால், நீங்கள் மிகவும் முயற்சி செய்தும் கூட உடல் பருமன் குறையாமல் இருக்கலாம். இந்த தவறுகள் காரணமாக நீங்கள் நினைப்பதை விட அதிக கலோரிகளை உடல் எடுத்துக் கொள்ளலாம். உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில், நீங்கள் தீவிரமான, கடுமையான டயட் முறையை மேற்கொள்ள நினைக்கலாம். அதை செய்யாதீர்கள் அதற்குப் பதிலாக, உங்கள் அன்றாட பழக்கவழக்கங்களை மதிப்பாய்வு செய்து ஆரோக்கியமான மாற்றங்களைச் செய்வது தான் சிறந்தது. தீவிர டயட் என்னும் உணவுக் கட்டுப்பாடு உண்மையில் உணவுப் பசியை அதிகரிக்கும். உங்கள் எடை இழப்பு இலக்குகளை எட்ட அது நிச்சயம் உதவாது. எனவே, சரியான உணவுத் தேர்வுகளை மேற்கொள்வதன் மூலம் உங்கள் எடைக் குறைப்புப் பயணத்தை மிகவும் பயனுள்ளதாக்குங்கள். மேலும், கீழ்கண்ட இந்த 5 டயட் தவறுகளையும் தவிர்க்கவும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவசரமாக சாப்பிடுவது


மெதுவாக சாப்பிடுங்கள் மேலும் மென்று சாப்பிடுங்கள். உடல் எடையை குறைக்க எளிய வழிகளில் இதுவும் ஒன்று. உங்கள் உணவை விழுங்குவதற்கு முன், நீங்கள் நன்றாக மென்று சாப்பிட வேண்டும். ஆனால் நம்மில் பலர் அவசரமாக சாப்பிட்டு முடிக்கவே விரும்புகிறோம். நமது பரபரப்பான வாழ்க்கையில், இந்த ஆரோக்கியமற்ற பழக்கத்தை நேரத்தை மிச்சப்படுத்த பயன்படுத்துகிறோம். உங்கள் எடை இழப்பு உணவுப் பிழைகளில் இதுவும் ஒன்றாக இருக்கலாம். இது நிச்சயம் நிறுத்தப்பட வேண்டிய பழக்கம். மெதுவாக சாப்பிடுவது குறைவாக சாப்பிட உதவுகிறது. பசியை திருப்திபடுத்தும் ஹார்மோன்களை அதிகரிக்கிறது. கலோரி உட்கொள்ளலை குறைக்கிறது. மென்று சாப்பிடும் போது உணவுகளுடன் கலக்கும் உமிர்நீர், செரிமானத்தை தூண்டி, திருப்தி உணர்வை அளிக்கிறது. 


உணவைத் தவிர்ப்பது


உணவைத் தவிர்ப்பது, குறைவாகச் சாப்பிடுவதற்கான எளிதான வழி என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் நீங்கள் சொல்வது தவறு. உண்மையில், உணவைத் தவிர்ப்பதால், உண்மையில் உங்களை அதிகமாக சாப்பிட வைக்கும். உணவுக் கட்டுப்பாட்டின் போது, நீங்கள் இடையில் பசியாற சிப்ஸ் அல்லது குக்கீகளுக்கு ஏங்குவதை உணர்ந்திருக்கலாம். மதிய உணவை சாப்பிட மறந்துவிட்டால் அல்லது காலை உணவை தவிர்க்கும் போது இது நிகழலாம். இந்த தவறை திருத்தவும். காலை உணவு உண்பவர்களை விட, காலை உணவைத் தவிர்ப்பவர்கள் அதிக எடை கொண்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நீங்கள் ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட வேண்டும். நீங்கள் உணவைத் தவிர்க்கும்போது, பகலில் அதிக கலோரிகளை உண்ணலாம்.


மேலும் படிக்க | சர்க்கரை நோயா... உடல் பருமன் குறையணுமா... ‘இந்த’ சர்க்கரைகளை தாராளமா சாப்பிடலாம்!


பசி இல்லாவிட்டாலும் சாப்பிடும் பழக்கம்


சிலருக்கு உணவைப் பார்த்தவுடன் பசி எடுப்பது போல் இருக்கும். மிக பிடித்த உணவு என்றால் பசி இல்லாவிட்டாலும் சாப்பிடும் வழக்கம் இருக்கும். நமது உடலுக்கு கலோரிகள் தேவைப்படாவிட்டாலும், நாம் உணவைப் பார்க்கும்போதெல்லாம் நமது பார்வைப் பசி உணர்வை தூண்டி நம்மை சாப்பிட வைக்கிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். அதாவது, உணவைப் பார்த்தவுடன் நமது "பசியை தூண்டும்" ஹார்மோன்கள் இயல்பாகவே அதிகரிக்கும். இதற்கான தீர்வு உணவுக்குப் பிறகு உணவுகளிலிருந்து விலகி இருங்கள். உங்கள் குளிர்சாதன பெட்டியில் அல்லது அலமாரியில் ஆரோக்கியமற்ற உணவுகளை சேமிக்க வேண்டாம்.


இரவு உணவை மிகவும் தாமதமாக சாப்பிடும் பழக்கம்


உங்கள் இரவு உணவை தாமதப்படுத்துவதால், தூக்கம் தொடர்பான சிக்கல் ஏற்படலாம். ஏனென்றால், அந்த கனமான உணவை ஜீரணிக்க உங்கள் உடல் மும்முரமாக வேலை செய்யும். மோசமான தூக்கம் அடுத்த நாள் பசி ஹார்மோனான கிரெலின் அளவை அதிகரிக்கலாம். இதனால் நீங்கள் அதிகமாக சாப்பிடலாம். தூக்கமின்மை காரணமாக, நமது மூளை துரித உணவுகளை அதிக விரும்பும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.


போதுமான அளவு தண்ணீர் குடிக்காத நிலை


தண்ணீரின் பற்றாக்குறை உங்கள் எடையைக் குறைக்கும் முயற்சிகளையும் தடுக்கலாம். நீர் உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. உங்கள் உடலில் உள்ள கழிவுகளை சுத்தப்படுத்துகிறது மற்றும் பசியை அடக்குகிறது. தண்ணீர் குடிப்பது நீரேற்றமாக இருக்க உதவுவதோடு மட்டுமல்லாமல், உங்கள் வயிறு நிரம்பியதாக உணரவும், பசியின் உணர்வை எதிர்த்துப் போராடவும் செய்கிறது. மேலும், நிறைய தண்ணீர் குடிப்பது உங்கள் உடல் தண்ணீரைத் தக்கவைத்துக் கொள்வதை நிறுத்த உதவும். மேலும் அந்த கூடுதல் பவுண்டுகள் தண்ணீர் எடையைக் குறைக்க உதவும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | தினமும் வெற்றிலை பாக்கு போட்டால் போதும்... கருத்தரிப்பு மையம் போகவே வேண்டாம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ