Banana:பூவன்பழத்தின் அற்புத நன்மைகள்! யாரெல்லாம் இதை சாப்பிடக்கூடாது தெரியுமா?
வாழை அனைவரையும் வாழவைக்கும் என்பதன் அடையாளமாகத் தான் சுபகாரியங்கள் நடைபெறும்போது வாழைமரம் கட்டுவார்கள். வாழை, வாழ்க்கைக்கு சுபசகுனம் மட்டுமல்ல, மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு அடிப்படையான பழம். உலகின் உணவுத் தேவையில் கணிசமாக பூர்த்தி செய்கிறது வாழை இனங்கள்.
சென்னை: வாழை அனைவரையும் வாழவைக்கும் என்பதன் அடையாளமாகத் தான் சுபகாரியங்கள் நடைபெறும்போது வாழைமரம் கட்டுவார்கள். வாழை, வாழ்க்கைக்கு சுபசகுனம் மட்டுமல்ல, மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு அடிப்படையான பழம். உலகின் உணவுத் தேவையில் கணிசமாக பூர்த்தி செய்கிறது வாழை இனங்கள்.
7000ம் ஆண்டுகளுக்கு முன் முதன்முதலாகப் பயிரிடப்பட்டு, உலகில் மிக அதிகமாக பயிரிடப்படும் பழமாகவும் கோதுமை, நெல், சோளம் இவற்றிற்குப் பிறகு நான்காவதாக மிக அதிகமாக பயிரிடப்படும் விளைபொருளாகவும் உள்ளது வாழை. ஆண்டொன்றுக்கு பத்து லட்சம் கோடி வாழைப்பழங்கள் உட்கொள்ளப்படுகின்றன என்பதில் இருந்து வாழையின் மகத்துவத்தை புரிந்துக் கொள்ளலாம்.
உலகில் சுமார் 3000 ரக வாழை வகைகள் இருக்கின்றன. ஒவ்வொரு வாழைப்பழமும் ஒவ்வொரு நோயை குணமாக்கும் தன்மை கொண்டவை.
Also Read | Incredible Red banana: செவ்வாழையின் சூப்பர் நன்மைகள்! யார் இதை சாப்பிடக்கூடாது?
தமிழ்நாட்டில் அதிக அளவில் பயிரிடப்படுவது பூவன் பழம். அளவில் சிறியதாக இருந்தாலும், குணத்தில் மிகவும் சிறந்தது. ஒரு வாழைத்தாரில் 100 முதல் 150 பழங்கள் விளையும்.
பூவன் பழத்த்தில் வைட்டமின் A, வைட்டமின் C, வைட்டமின் B6, இரும்புச்சத்து, மெக்னீசியம் மற்றும் சோடியம் என பல சத்துக்கள் உள்ளன.
அதிக நார்ச்சத்து உள்ள பூவன் வாழைப்பழத்தை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதால் உங்கள் குடல் இயக்கம் சீராக இருக்கும். இதிலுள்ள செரோடோனின் என்ற முக்கியமான ஹார்மோன் நமது மனம் மகிழ்ச்சியாக இருக்கத் தேவையான பண்புகளைக் கொண்டுள்ளது. மூளையில் இயற்கையாக செரோடோனின் உருவாக இது வழிசெய்கிறது.
அதிக பொட்டாசியம் சத்துள்ள உணவுப் பொருட்கள் மனச்சோர்வின் அறிகுறி, பதற்றம் போன்றவற்றை தடுக்கும். பூவன்பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இதை தினசரி சாப்பிடலாம்.
பொட்டாசியம் சத்து நிறைந்த உணவுகள் ரத்த அழுத்தத்தை குறைப்பதிலும் இருதய நோய்கள், பக்கவாதம் வராமல் தடுப்பதிலும் சிறப்பாக துணைபுரிபவை என்பதும் கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்று. பூவன் பழத்தில் உள்ள மெலடோனின், தூக்கத்தை முறைப்படுத்த உதவுவதோடு, உடலின் இயற்கையான சுழற்சியை ஒழுங்குபடுத்தும்.
வாழைப்பழத்தில் இயற்கையாகவே உள்ள அமினோ ஆசிட் ட்ரிப்டோபான் உடலின் செரோடோனின் அளவை மேம்படுத்த உதவுகிறது. பொதுவாக வாரத்திற்கு நான்கு பூவன்பழம் சாப்பிட்டால் உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படாது.
துத்தநாகம், வைட்டமின் A, செலினியம் மற்றும் புரதம் என பல்வேறு சத்துக்களை கொண்டுள்ள பூவன் வாழைப்பழம், ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை அதிக அளவில் வழங்குகிறது
வாயுத்தொல்லையினால் சங்கடமா? உங்கள் உணவை ஜீரணிக்க சிரமப்படுகிறீர்களா? இது உணவு செரிமானத்திற்கு தேவையான குடல் நுண்ணுயிர் குறைபாட்டினால் இருக்கலாம். மனித உடலில் 40 ட்ரில்லியன் நுண்ணுயிர்கள் இருக்கின்றன, பெரும்பாலானவை நம் குடலில்தான் வாழ்கின்றன.
Also Read | Health Alert! சாப்பிட்ட பிறகு சாப்பிடக் கூடாத ‘சில’ பழங்கள்
மொத்தமாக அவை குடல் நுண்ணுயிர்க்கட்டு என்று அறியப்படுகிறது. இவை நமது ஆரோக்கியத்தை தீர்மானிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. வாழைப்பழங்களின் அனைத்து வகைகளிலும் நுண்ணுயிர் கலந்துள்ளது. இவை குடல் நுண்ணுயிர் செழித்து வளர சரியான சூழ்நிலையை உருவாக்கித் தருகின்றன.
செரிமாண சக்தியை மேம்படுத்தி. உடலுக்கு நல்ல ஊட்டத்தை கொடுப்பதோடு தசைகளின் ஆரோக்கியத்திற்கு அடிப்படையாக அமைகிறது வாழைப்பழம்.
மலச்சிக்கலை அகற்றுவதில், மிகவும் அற்புதமாக பயன்படக் கூடிய இப்பழத்தினை தினம் இரவு ஆகாரத்திற்கு பின் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் ஏற்படாது.
ஆஸ்துமா பாதிப்பு உள்ளவர்கள், குளிர்ச்சியான தேகம் கொண்டவர்கள், நீரழிவு நோய் இருப்பவர்கள் மட்டும் பூவன்பழத்தை சாப்பிட வேண்டாம். அடிக்கடி செரிமாணக் கோளாறால் அவதிப்படுபவர்கள் தினமும் ஒருவேளை உணவை தவிர்த்து விட்டு பூவன்பழத்தை மட்டும் இரண்டு நாளைக்கு சாப்பிட்டு வந்தால் செரிமாணப் பிரச்சனைகள் அடியோடு அகலும்.
Also Read | விந்தணு குறையாமல் இருக்க இந்த ‘5’ உணவுகளை ஆண்கள் தவிர்க்க வேண்டும்..!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR