பழ வகைகள் மனிதனுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கக்கூடியது. குறிப்பாக வாழைப்பழம் சத்து நிறைந்ததாகும். வாழைப்பழம் உடல்நலத்துக்கு மட்டுமின்றி சருமத்திற்கும் ஆரோக்கியத்தை தரும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்தவகையில், சருமத்தில் ஈரப்பதத்தை அளிக்கும் தன்மை வாழைப்பழத்திற்கு இருப்பதால் இது சரும சுருக்கங்களை தவிர்க்க உதவுகிறது. அதேபோல் முகப்பரு ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைத்து சருமத்தை மென்மையாக வைத்துக்கொள்ள வழி செய்கிறது.


செய்முறை:


ஒரு கிண்ணத்தில் நன்கு பழுத்த வாழைப்பழத்தை எடுத்து பிசைந்து கொள்ளவும். பிறகு முகத்தில் கண்களைத் தவிர பிற பகுதிகளில் நேரடியாக தடவவும். சுமார் 20 நிமிடங்கள் கழித்து சாதாரண தண்ணீரில் முகத்தை கழுவிவிட்டால் சருமம் வறட்சியிலிருந்து தப்பிக்கும்.


மேலும் படிக்க | Health vs Kale: நீரிழிவையும், ரத்த அழுத்தத்தையும் போக்கு கீரைகளின் ராணி பரட்டை


அதேபோல்,பழுத்த வாழைப் பழம் ஒன்றை எடுத்து நன்றாக பிசைந்து கொள்ளுங்கள். அதில் காய்ச்சாத பால் 2 டேபிள் ஸ்பூன் சேர்த்து முகத்தில் கருமை படிந்த இடத்தில் தடவினால் முகத்தில் உள்ள கருமை நீங்கும்.



அதுமட்டுமின்றி, நன்கு பழுத்த வாழைப் பழத்தை பிசைந்து அதில் இரண்டு சொட்டு எலுமிச்சைச் சாறு மற்றும் முட்டையின் வெள்ளைக்கரு கலந்து முகத்தில் பூசி காய்ந்த பிறகு கழுவினால், தோலின் கருமை மற்றும் கண்ணைச் சுற்றி உள்ள கரு வளையமும் நீங்கும்.


மேலும் படிக்க | Chia Seed vs Weight Loss: கொழுப்பை குறைத்து உடல் எடையை பராமரிக்க சியா விதைகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!