பல் துலக்குதல் என்பது நம்முடைய உடல் ஆரோக்கியத்தையும், பல் சுகாதாரத்தையும் பராமரிக்க உதவும்  முக்கியமான ஒன்றாகும்.  பற்களை நன்றாக துலக்கினால் தான் கிருமிகள் எதுவும் நமது வயிற்றுக்குள் சென்று உடல்நல பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்கும்.  ஒரு நபர் ஒரு நாளில் எத்தனை முறை பல் துலக்க வேண்டும் என்பதில் பல கருத்துக்கள் இருந்தாலும், உண்மையாக ஒரு நபர் எப்போது பல் துலக்க வேண்டும் என்பது பற்றி பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் இருந்துவருகிறது.  சிலர் காலையில் காபி குடித்துவிட்டு, உணவை சாப்பிட்டுவிட்டு நேரடியாக சென்று பல் துலக்குவார்கள்.  இது தவறானது என்று கருதப்படுகிறது, ஏனெனில் நீங்கள் சாப்பிட்ட பிறகு 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரையிலும் உங்கள் வாய் அமில நிலையில் இருக்கும்.  இந்த சமயத்தில் நீங்கள் பல் துலக்கினால், உங்கள் பல் எனாமலில் உள்ள அமிலம்  வெளியேறிவிடும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Protein Quality: இந்தியர்களின் உணவில் தரமான புரதம் இல்லையா? என்ன சொல்றீங்க?


அதுவே காலை நேரத்தில் நீங்கள் பல் துலக்கினால் இரவு முழுவதும் உங்கள் வாயில்  உமிழ்நீரில் வளர்ந்து வரும் கெட்ட பாக்டீரியாக்கள் அழிந்துவிடும்.  பல் துலக்கிய 30 நிமிடங்களுக்கு பிறகு அதற்கு மேல் நீங்கள் உணவு சாப்பிடவோ அல்லது காபியை குடிக்கவோ செய்யலாம்.  மேலும் படுக்கைக்குச் செல்வதற்கு முன் பல் துலக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.  உணவுக்குப் பிறகு உடனடியாக பல் துலக்குவது தவறான ஒன்று என்றும் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.  இது பற்களின் எனாமலை மென்மையாக்கி கூடிய விரைவில் அதனை சிதைத்து விடுகின்றது.   உணவை உட்கொண்ட பிறகு குறைந்தது அரை மணி நேரம் வரை காத்திருந்து அதன் பின்னர் பல் துலக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.  


இரவு உணவிற்குப் பிறகு படுக்கைக்கு செல்லும்போது பற்களை துலக்குவதன் மூலம் ஒரே இரவில் உங்கள் வாயில் நோய்க்கிருமி எண்ணிக்கையை அதிகரிக்கக்கூடிய அனைத்து எச்சங்கள் மற்றும் உணவு குப்பைகள் அகற்றப்படுகிறது.  பல் துலக்கும்போது நீங்கள் அதிக அழுத்தம் கொடுத்து பற்களை துலக்கக்கூடாது, அப்படி செய்தால் உங்கள் பல் மற்றும் பல் ஈறுகளில் பாதிப்பு ஏற்படும்.  ஒரு நல்ல ஃப்ளூரைடு பற்பசையைக் கொண்டு பல் துலக்குவது, ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்கும்படி பரிந்துரைக்கப்படுகிறது.  ஒவ்வொரு தடவை உணவு உண்ட பிறகும் வாயை சுத்தமாக கழுவ வேண்டியது அவசியமாகும்.  அப்படி செய்யும்போது உங்கள் பல் ஈறுகளுக்கு இடையிலுள்ள தேவையற்ற உணவு துகள்கள் அகற்றப்பட்டு விடும்.  இறுதியாக ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்க வேண்டும், அதாவது காலையில் ஒரு முறை மற்றும் படுக்கைக்கு முன் ஒரு முறை என செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.


மேலும் படிக்க | சீரகம் பயன்படுத்தும்போது ஜாக்கிரதை: பக்க விளைவுகளின் பட்டியல் இதோ!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ