தொப்பை குறையவில்லையா? இந்த 3 முக்கிய உதவிக்குறிப்புகளைப் பின்பற்றவும்
Belly Fat Burning Tips: தற்போதைய காலகட்ட மக்கள் தொப்பை கொழுப்பால் மிகவும் வருத்தப்படுகிறார்கள்.
இந்தியாவில் எடை அதிகரிப்பு காரணமாக பலர் கவலைப்படுகிறார்கள், கொரோனா லாக்டவுன் மற்றும் வீட்டிலிருந்து வேலை செய்வதால் இந்த பிரச்சனை இன்னும் அதிகரித்துள்ளது. உங்களின் வாழ்க்கை முறையிலும், உணவுப் பழக்க வழக்கங்களிலும் மாற்றங்களைச் செய்வதன் மூலம் இந்தப் பிரச்சனையில் இருந்து தீர்வு காணலாம்.
தொப்பையை குறைக்க குறிப்புகள்
1. ஓமத்தை தண்ணீரில் கலந்து குடிக்கவும்
வயிற்று கொழுப்பைக் குறைக்க ஓமத் தண்ணீர் சிறந்த மருந்தாகக் கருதப்படுகிறது. இது எடையைக் குறைக்க உதவுவது மட்டுமல்லாமல் செரிமானத்தையும் மேம்படுத்துகிறது. ஒரு ஸ்பூன் ஓமத் விதைகளை தண்ணீரில் ஊறவைத்து, இரவு முழுவதும் ஒரு பாத்திரத்தில் வைக்கவும். இந்த நீரை காலையில் எழுந்தவுடன் சிறிது தேன் சேர்த்து குடித்து வந்தால் உடலுக்கு பலன் கிடைக்கும்.
மேலும் படிக்க | இதயத்தில் ஏற்படும் ரத்தக்கட்டிகள் கண்டுபிடிப்பது எப்படி? இதோ அறிகுறிகள்
2. அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்கவும்
சிலருக்கு பசியை விட அதிகமாக சாப்பிடும் கெட்ட பழக்கம் இருக்கும். தேவையான அளவு மட்டும் சாப்பிடுவதே சரியான வழி. ஒரே நேரத்தில் அதிக உணவு உட்கொள்வதால் தொப்பை கொழுப்பு அதிகரிக்கத் தொடங்குகிறது. 2 முதல் 3 மணி நேர இடைவெளியில் சாப்பிட்டால், செரிமானமும் சரியாகும். இதனுடன் தொடர்ந்து தண்ணீர் அருந்தவும்.
3. இனிப்பான பொருட்களை குறைவாக உண்ணுங்கள்
நீங்கள் இனிப்புகளை அதிகம் விரும்புகிறீர்கள் என்றால், அது உடல் பருமன் மட்டுமல்ல, நீரிழிவு மற்றும் மாரடைப்பு போன்ற கடுமையான நோய்களும் வருவதற்க்கு காரணமாகிவிடும். தினசரி உணவில் இருந்து இனிப்பு உணவின் அளவைக் குறைத்தால், படிப்படியாக தொப்பை குறைய ஆரம்பித்து, அதன் விளைவு சில வாரங்களில் தெரியும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இவற்றுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Belly Fat: தொப்பையை குறைக்க இந்த பானங்கள் உங்களுக்கு உதவும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR