வெறும் வயிற்றில்  நீர் குடித்தால் என்ன  நன்மைகள் உண்டு. காலையில் வெறும் வயிற்றில் இரண்டு டம்ளர் இளஞ்சூடான நீர் அருந்துவதன்மூலம் உடல் எடை குறையும். கழிவுகள் வெளியேறும். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். சருமம் இளமையாகும். புத்துணர்வு கிடைக்கும். செரிமானம் சீராகும்.  மலச்சிக்கலைச் சரிசெய்யும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நீரில்வெந்தியம்,தேன்,துளசி, வில்வம்,அருகம் புல்,இவற்றில்  ஏதேனும் ஒன்றை 2 லிட்டர் நீரில் ஊற வைத்து நீர் அருந்துவதால் ஏற்படும் நமைகள்.


நீர்+வெந்தியம்=குடிப்பதால் ஏற்படும் நலன்கள் : வெந்தய நீர் குளிர்ச்சியைத் தந்து, ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும். பெண்களுக்கு ஏற்பட்டு வயிற்றுவலியை குறைக்கும்.  


நீர்+சீரகம்=குடிப்பதால் ஏற்படும் நலன்கள் : சீரகத் தண்ணீர் அஜீரணக்கோளாறுகளை நீக்கி, உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும்.


நீர்+தேன்=குடிப்பதால் ஏற்படும் நலன்கள் :  இளஞ்சூடான நீரில் தேன் கலந்து அருந்தினால், உடலுக்கு பலம் தரும். சளி மற்றும் இருமலுக்கு நல்ல மருந்து. குரலை மென்மையாக்கும். ரத்தத்தைச் சுத்தம் செய்யும். உடலின் ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். வயிற்று எரிச்சலைக் குறைக்கும். செரிமானத்துக்கு உதவும். மலச்சிக்கலைச் சரிசெய்யும். தூக்கமின்மையைப் போக்கும். உடல் எடையைக் குறைக்கும்.


நீர்+துளசி=குடிப்பதால் ஏற்படும் நலன்கள் : வாய் துர்நாற்றம், நீரழிவு நோய் குணமாக்கும் தொலில் இருக்கும் படை,சொரி இவற்றை குணமடைய செய்யும்.


நீர்+வில்வம்=குடிப்பதால் ஏற்படும் நலன்கள் : மாதவிடாயின்போது ஏற்படும் அதிக இரத்தப்போக்கு குணமாகம்,சீதபேதி குணமாகம். 


நீர்+அருகம்புல்=குடிப்பதால் ஏற்படும் நலன்கள் : சுத்தம் செய்யப்பட்ட அருகம்புல் சாரை காலை எழுந்தவுடன் குடித்து வந்தால் உடலிலுள்ள கெட்ட நீர் வெளியேறி தேவையற்ற சதைப்பகுதி குறைந்து விடுமாம். ரத்தத்தை சுத்தப்படுத்தும் சக்தியும் அருகம்புல்லுக்கு உண்டாம்.


ஞாபக சத்தியைத் தூண்ட அருகம்புல் சிறந்த மருந்தாகும். ஞாபக மறதியைப் போக்கி அன்றாட வாழ்வில் மன உளைச்சல், மன இறுக்கம் நீங்கும். அருகம்புல்லை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் கஷாயம் செய்து குடித்து வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.


நீரில்  ஏதேனும்  ஒன்றை {வெந்தியம்,தேன்,துளசி, வில்வம்,அருகம் புல்} எடுத்து இரவில் ஒரு லிட்டர் நீரில் போட்டு மூடி விடுங்கள். மறுநாள் அந்த நீரை விடியற்காலையில் அருந்த வேண்டும் இதனால் முற்றிலும் உடலிலுள்ள அனைத்து குடல்கள் மற்றும் சிறு நீப்பையில் இருக்கும் வெப்பம் தணியும், உடல் வெப்பம் தணிந்து குளிர்ச்சி பெறும், மலச்சிக்கல் குணமாகும், உடலில் வெப்பம் சம்பந்தமான நோய்கள் தீரும்.