பாசிப் பயறு இந்தியாவில் பிரபலமான பருப்புகளில் ஒன்றாகும். இது மருத்துவ குணங்கள் நிறைந்தது. பச்சைப் பயறு அல்லது சிறுபயறு எனவும் அழைப்படுகிறது. இந்திய துணைக்கண்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இப் பயிர், இந்தியா, சீனா, கிழக்காசிய நாடுகளில் பெருமளவில் உற்பத்திச் செய்யப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது அதிக அளவில் புரதசத்தும் மாப்பொருளையும், குறைந்த அளவில் கொழுப்புச்சத்தையும் கொண்டுள்ளது. முளைக்கட்டிய பாசிப்பயறு (Moong Dal Benefits) உடற்குறைப்பு சமச்சீர் உணவாக அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. எனவே பாசிப் பயறு குறித்த 6 ஆரோக்கிய நன்மைகளை நாம் இங்கே காண்போம்.


ALSO READ | Health Tips: இசைக்கருவியாக பயன்படும் இந்தக் காய் உடலுக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும் நீர்க்காய்


* ஊட்டச்சத்து மிகுந்தது: பாசி பயறில் விட்டமின் பி9 (Vitamins) மிக அதிகளவும், பி1 அதிகளவும் காணப்படுகின்றன. மேலும் இதில் விட்டமின் பி5, பி6, பி2, விட்டமின் சி, ஏ ஆகியவையும் உள்ளன. இதில் தாதுஉப்புக்களான செம்புச்சத்து, இரும்புச்சத்து, பாஸ்பரஸ் ஆகியவை மிகஅதிகளவும், மெக்னீசியம், மாங்கனீசு ஆகியவை அதிகளவும் காணப்படுகின்றன.  மேலும் இதில் செலீனியம், கால்சியம், துத்தநாகம், பொட்டாசியம் ஆகியவையும் உள்ளன. இதில் அதிகளவு நார்ச்சத்து, புரதச்சத்து, கார்போஹைட்ரேட், அமினோ அமிலங்கள் காணப்படுகின்றன.


* இதய ஆரோக்கியத்திற்கு நல்லது: பாசிப் பயரில் பொட்டாசியம் மிக அதிகமாக உள்ளது. எனவே இது உடலில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. எனவே, பாசிப்பருப்பை வழக்கமாக உட்கொள்வது உங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.


* செரிமானத்தை மேம்படுத்தும்: பாசி பயறானது செரிமானத்தை மேம்படுத்த தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. இது தனித்துவமான ஸ்டார்ச்சைக் கொண்டுள்ளது. இது செரிமானப்பாதையில் நல்ல பாக்டீரியாக்களின் செயலினைத் துரிதப்படுத்தி உணவினை நன்கு செரிக்க உதவுகிறது. மேலும் இப்பயிறில் காணப்படும் கார்போஹைட்ரேட் எளிதில் செரிமானம் அடையும் தன்மையைக் கொண்டுள்ளது. இதனால் மற்ற பயறுகளைவிட பாசி பயறானது எளிதில் செரிமானம் அடைவதுடன் செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.


* கர்ப்பிணிகளின் ஆரோக்கியத்திற்கு: கர்ப்பிணிகள் பொதுவாக ஃபோலேட்டுகள் நிறைந்த உணவினை உண்ண அறிவுறுத்தப்படுகிறார்கள். பாசி பயறானது ஃபோலேட்டுகளை அதிகளவு கொண்டுள்ளது. மேலும் கர்ப்பிணிகளின் ஆரோக்கியத்திற்கு அவசியமான இரும்புச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து ஆகியவையும் இப்பயறில் காணப்படுகின்றன. எனவே இப்பயறினை அடிக்கடி உண்டு கர்ப்பிணிகள் தங்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.


* சருமம் பளபளப்பாக: பாசி பயறில் உள்ள ஆன்டிஆக்ஸிஜென்டுகள் ப்ரீரேடிக்கல்களின் செயல்பாடுகளைத் தடுத்து சருமத்தைப் பாதுகாக்கிறது. இதில் உள்ள செம்புச்சத்து சருமத்திற்கு தேவையான இரத்த ஓட்டத்தை அதிகரித்து சருமத்தை பளபளப்பாக்குகிறது. 


ALSO READ | Foods:வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ஹார்ட் அட்டாக் வரும் தெரியுமா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR