அத்திப்பழத்தில் கிடைக்கும் பலன்கள்
பொதுவாக அத்திப்பழம் உட்கொள்வது மூலம் நமக்கு கிடைக்கும் பலன்கள் நிறைய உள்ளன. அத்திப் பழத்தின் இலை, மரப்பட்டை, பழம், இவற்றில் கிடைக்கும் பலன்கள் :
அத்தி பழத்தில் இருக்கும் புரோட்டீன், சர்க்கரை சத்து, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ள பழம் இது!
# அத்திப்பழம் சாப்பிடும் பொது உடலில் உள்ள இரத்தத்தை சுத்தம் செய்து , அதிக அளவு ரத்த உற்பத்தி செய்கிறது.
# அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் உடல் கவர்ச்சிகரமாக இருக்கும்.
# ஒரு துண்டு உலர்ந்த அத்திப்பழத்தில் சுமார் 47 கலோரிகள் உள்ளன. மற்றும் 0.2 கிராம் கொழுப்புக்கள் உள்ளது.
# உடல் எடையைக் குறைக்க நினைத்தால் இந்தபழத்தை ஸ்நாக்ஸாக சாப்பிடால் உடல் எடை குறையும்.
# சிறுநீர்ப்பைப் புண், சிறுநீர்ப் பையில் கல் தோன்றுதல், ஆஸ்துமா, வலிப்பு நோய், உடல் உளைச்சல், சோர்வு, அசதி, இளைப்பு போன்றவற்றை நீக்கவும் அத்திப் பழம் மிகச் சிறந்த பலன் தருகிறது.
# அத்திப் பழத்தைச் சாறு பிழிந்து அதனுடன் தேன்கலந்து சாப்பிட்டு வந்தால் மூலநோயைக் குணப்படுத்தும்.
# அத்திப் பழ இலையை உலர வைத்துப் பவுடராக்கிக் தேனில் கலந்து சாப்பிட்டால், பித்தம், பித்தத்தால் வரும் நோய்கள் குணம் பெறுகின்றன.
# வாய்ப்புண், ஈறுகளில் சீழ்பிடித்தல் போன்ற நோய்களைக் குணமாக்க அத்தி இலைகளைத் தண்ணீரில் கொதிக்க வைத்து வாய் கொப்பளிப்பது மிகவும் நல்லது .
# அத்தி மரத்தின் பட்டையை இரவில் ஊற வைத்துக் காலையில் குடிநீராகக் குடித்தால் வாத நோய்,
மூட்டுவலிகள் குணப்படும்.
அத்திப்பழத்தில் உள்ள வைட்டமின் ஏ, வைட்டமின் சி உள்ளது .