Diabetes Control Tips: இந்த நவீன காலத்தில் பல நோய்கள் மக்களை ஆட்டிப்படைக்கின்றன. அவற்றில் நீரிழிவு நோயும் மிக முக்கியமான ஒன்றாகும். குறிப்பாக இந்தியாவில், பெரும்பாலான மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது ஒரு வாழ்க்கை முறை தொடர்பான நோயாக கருதப்படுகின்றது. இது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வெகுவாக குறைக்கின்றது. நீரிழிவு நோயின் துவக்கம் எவ்வாறு நடக்கிறது? நமது கணையத்தால் இன்சுலினை சரியாக உற்பத்தி செய்ய முடியாமல் போனால், இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கத் தொடங்குகிறது. இன்சுலின் நமது இரத்த சர்க்கரை அளவை (Blood Sugar Level) பராமரிக்கும் பணியை செய்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்சுலின் சிறிய அளவு குறைந்தாலும், இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கத் தொடங்குகிறது. ஆகையால், அவை சரியான அளவில் உடலில் இருப்பது அவசியமாகும். நீரிழிவு நோயாளிகள் அவ்வப்போது தங்கள் இரத்த சர்க்கரை அளவை பரிசோதித்து, மருத்துவரை சென்று கலந்தாலோசிப்பது நல்லது. சில வீட்டு வைத்தியங்களும் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும். இன்சுலின் ரெசிஸ்டன்சை கட்டுக்குள் வைக்க உதவும் சில எளிய வீட்டு வைத்தியங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம். 


இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் என்றால் என்ன?


உணவின் மூலம் கிடைக்கும் சர்க்கரையை நமது செல்களுக்கு கொண்டு செல்லும் பணியை இன்சுலின் செய்கிறது. இதனால் நமது செல்கள் இந்த சர்க்கரையை ஆற்றலாகப் பயன்படுத்த உதவி கிடைக்கிறது. ஆனால் செல்கள் இன்சுலினை அடையாளம் காண முடியாதபோது, ​​​​சர்க்கரை இரத்தத்தில் சுற்றிக் கொண்டே செல்களை அடைய முடியாமல் போகிறது. இதைப் போக்க, உடல் அதிக இன்சுலின் உற்பத்தி செய்ய வேண்டிய நிலை ஏற்படுகின்றது. ஆனால் சர்க்கரை பிரச்சனை தொடர்கிறது. இதன் காரணமாக இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் (Insulin Resistance) பிரச்சனை தொடங்குகிறது. பூஞ்சை மற்றும் தோல் நோய்த்தொற்றுகள் இருந்தாலோ, அல்லது முடி உதிரும் பிரச்சனைகள் ஏற்பட்டாலோ, உங்களுக்கு இன்சுலின் எதிர்ப்பு ஏற்படக்கூடும்.


மேலும் படிக்க | உடல் பருமன் குறைய... கொழுப்பு கரைய... நீங்கள் கை விட வேண்டிய சில பழக்கங்கள்


இன்சுலின் ரெசிஸ்டன்சை கட்டுக்குள் வைக்க காலையில் இவற்றை குடிக்கலாம்: 


மஞ்சள் நீர் (Turmeric Water): நீரிழிவு நோயாளிகள் வெதுவெதுப்பான நீரில் ஒரு சிட்டிகை மஞ்சளைக் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். மஞ்சளின் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் குர்குமின் உள்ளன. இவை இரத்த சர்க்கரை கட்டுக்குள் வைத்து மன அழுத்தத்தை குறைக்கின்றன. 


வெந்தய நீர் (Fenugreek Water): ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை இரவில் தண்ணீரில் ஊற வைத்து காலையில் குடித்து வந்தால், இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் கட்டுப்பட்டு, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கலாம்.


நெல்லிக்காய் சாறு (Amla Juice): காலையில் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவது அல்லது நெல்லிக்காய் சாறு குடிப்பது இன்சுலினை அளவுகளை மேம்படுத்துவதோடு இரத்த சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைக்கும். 


இலவங்கப்பட்டை தண்ணீர் (Cinnamon Water): இலவங்கப்பட்டை துண்டை தண்ணீரில் கொதிக்க வைத்து இரவு முழுவதும் ஆறவிடவும். சுகர் நோயாளிகள் இதை காலையில் குடிப்பதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை கட்டுக்குள் இருப்பதுடன் வளர்சிதை மாற்றமும் மேம்படும். 


ஊறவைத்த பாதாம் (Almonds): 5-6 பாதாமை இரவு முழுவதும் ஊறவைத்து வெறும் வயிற்றில் சாப்பிடலாம். பாதாமில் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளன. இவை இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கவும் உதவும். 


ஆளிவிதை (Flax Seeds): ஒரு ஸ்பூன் ஆளிவிதையை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் விதைகளை உட்கொள்ளவும். இதில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளன. இது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது.


(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | மூட்டு வலிக்கு முடிவு கட்டும்... சில எளிய வீட்டு வைத்தியங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ