கண்ணுக்கு கண்ணாக கண்களை காக்கும் ஆரோக்கிய பானங்கள்: கண்டிப்பா குடிங்க
Juices For Eye Care: கண் பார்வையை மேம்படுத்தி, கண்களின் ஆரோக்கியத்தை பலப்படுத்தும் பானங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Juices For Eye Care: கண் நம் உடலில் மிக முக்கியமான உறுப்பாகும். நாம் பரிபூரண ஆரோக்கியத்துடன் இருக்க, உடலின் அனைத்து உறுப்புகளையும் ஆரோக்கியமாக வைத்திருப்பது முக்கியம். இவற்றின் ஆரோக்கியத்திற்கு நல்ல உணவும், பராமரிப்பும் அவசியம். குறிப்பாக, கண்களின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இவை பல வித பாதிப்புகளுக்கு ஆளாகக்கூடிய சாத்தியக்குறுகள் அதிகம் உள்ளன. மாசுபாடு, அதிக ஒளி, தொடர்ந்து மொபைல் அல்லது லேப்டாப் பார்ப்பது என கண்களின் மீதான அழுத்தம் இந்நாட்களில் மக அதிகமாக உள்ளது.
இன்றைய காலகட்டத்தில் கண்களுக்கு கண்ணாடி அணிவது மிகவும் பொதுவான பிரச்சனையாகிவிட்டது. மிக சிறிய வயதிலேயே பலர் கண்ணாடி அணிய வேண்டிய நிலை உள்ளது. அதிகப்படியான திரை நேரம் (Screen Time) காரணமாக பலருக்கு பார்ப்பதில் சிரமம் ஏற்படுகின்றது. தவறான உணவுப் பழக்கம் உடலில் ஊட்டச்சத்து குறைபாட்டை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக கண்களும் பாதிப்புக்கு உள்ளாகின்றன.
சில எளிய, இயற்கையான வழிகளில் கண் (Eyes) பார்வையை மேம்படுத்தலாம். சில இயற்கையான பானங்கள் இதில் உதவியாக இருக்கும். கண் பார்வையை மேம்படுத்தி, கண்களின் ஆரோக்கியத்தை பலப்படுத்தும் பானங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
கண்பார்வையை மேம்படுத்தும் 5 பானங்கள்
எலுமிச்சை சாறு
எலுமிச்சையில் (Lemon) அதிக அலவு வைட்டமின் சி உள்ளது. இதில் ஜியாக்சாந்தின் என்ற தனிமம் உள்ளது. இது கண்களுக்கு நல்லது. இதன் காரணமாக எலுமிச்சை நீர் கண்களுக்கு மிகவும் நன்மை பயக்கும் என்று கூறப்படுகின்றது. எலுமிச்சை நீரை குடிப்பதால் கண்களில் ஏற்படும் வீக்கங்களும் குறையும். இந்த பானத்தை குடிப்பதால் கண்கள் சுத்தமாகும்.
தண்ணீர்
உடலை நீரேற்றமாக வைத்திருக்க தண்ணீர் (Water) மிகவும் அவசியம். கண்கள் மற்றும் உடலின் சீரான செயல்பாட்டிற்கு நீர்ச்சத்து மிக அவசியம். தண்ணீர் குடிப்பதால் கண் வறட்சி குறையும். கண்களில் ஈரப்பதம் மற்றும் சீரான இரத்த ஓட்டம் இருக்கும். மன அழுத்தம் கண்களில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது, இதைத் தவிர்க்க போதுமான அளவு தண்ணீர் குடிப்பது நல்லது.
மேலும் படிக்க | நோய்கள் எதுவும் உங்க பக்கம் வரவே வராது.. உத்திரவாதம் கொடுக்கும் சில மூலிகை டீ வகைகள்
கேரட் சாறு
கேரட்டில் (Carrot) உள்ள பீட்டா கரோட்டின் எனப்படும் புரோவிட்டமின் கண்களுக்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. கேரட் ஜூஸில் வைட்டமின் ஏ உள்ளது. இது கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றது. கேரட் ஜூஸ் குடிப்பதால் கண்பார்வை மேம்படும். வெறும் வயிற்றில் கேரட் ஜூஸ் குடிப்பதோடு, இந்த ஜூஸை கண்களின் மேல் தோலில் தடவலாம்.
ஆரஞ்சு சாறு
ஆரஞ்சு (Orange) பழத்தில் அதிக அளவில் வைட்டமின் சி உள்ளது. இந்த வைட்டமின் கண்களுக்கும் மிக அவசியமானது. ஆரஞ்சு பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் கண்களை எந்த வித பாதிப்பும் வராமல் காக்கின்றன. கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், பார்வையை மேம்படுத்தவும், தினமும் 1 கிளாஸ் ஆரஞ்சு சாறு குடிக்கலாம்.
பீட்ரூட் சாறு, ஆப்பிள் சாறு
பீட்ரூட்டில் (Beetroot) வைட்டமின் ஏ உள்ளது, ஆப்பிளில் (Apple) வைட்டமின் சி உள்ளது. இந்த இரண்டு வைட்டமின்களும் கண்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். இந்த இரண்டிலும் கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இந்த சாற்றை தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் குடித்து வந்தால் கண் தொடர்பான அனைத்து பிரச்சனைகளிலிருந்தும் நிவாரணம் கிடைக்கும். இந்த ஜூஸ் கண் பார்வையையும் மேம்படுத்தி கண் ஆரோக்கியத்தையும் உறுதி செய்யும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | வேகமாக உடல் எடையை குறைக்கணுமா? சுலபமாக குறைக்கலாம்.... இதை குடித்தால் போதும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ