Detox: உடலில் சேரும் நச்சுக்களை வெளியேற்ற ‘சில’ எளிய வழிகள்
உடலில் சேர்ந்துள்ள நச்சுத்தன்மையை நீக்க, பலவிதமான ஆரோக்கியமான உணவுகளையும் பானங்களையும் எடுத்துக் கொள்ளவதுடன் சில பழக்கங்களை கடைபிடிக்குமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
பல ஆண்டுகளாக நாம் உண்ணும் உணவில் இருந்து வெளியாகும் நச்சுகள் நமது உடலின் எடையை வேகமாக அதிகரிக்கின்றன. மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப்பழக்கத்தால், உங்கள் உடலில் பல வகையான அழுக்குகள் சேரத் தொடங்குகின்றன. இது பல வகையான உடல் பிரச்சனைகளுக்கு மூல காரணமாக அமைந்திடுகிறது என்பது அனைவருக்கும் தெரியும். உடல் பருமன், வயிற்றுப் பிரச்சினைகள் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியவை இதில் அடங்கும்.
குழந்தைப் பருவத்திலிருந்தே, சத்தான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் இது இப்போதைய வாழ்க்கை முறையில் சாத்தியமில்லை. வயது ஏற ஏற, சத்தான உணவை வீட்டில் சமைத்து சாப்பிடுவதை விட, வெளியில் சாப்பிடுவதையே பலரும் விரும்புகின்றனர். அதிக அளவிலான வெளிச் சாப்பாடு, குடல் மற்றும் கல்லீரலை சேதப்படுத்தும். மேலும், நச்சுகள் உடலில் சேரத் தொடங்குகின்றன, இதன் காரணமாக நமது எடை வேகமாக அதிகரிக்கத் தொடங்குகிறது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் பீதி அடையத் தேவையில்லை, உடலின் நச்சுகளை வெளியேற்றுவதன் மூலம் எடையை எவ்வாறு குறைக்கலாம் என்பதை அறிந்து கொள்ளலாம்.
உடலில் சேர்ந்துள்ள நச்சுத்தன்மையை நீக்க, பலவிதமான ஆரோக்கியமான உணவுகளையும் பானங்களையும் எடுத்துக் கொள்ளவதுடன் சில பழக்கங்களை கடைபிடிக்குமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
வாரம் ஒருமுறை உண்ணாவிரதம்
நாம் தினமும் ஜிம்முக்கு சென்று வந்தாலும், வாரத்தில் ஒரு நாள் உடலுக்கு முழு ஓய்வு கொடுப்பது போல், கல்லீரலுக்கும், குடலுக்கும் ஓய்வு தேவை. தினமும் உணவு உண்ணும் நிலையில், இவை அனைத்தும் ஓயாமல் வேலை செய்கின்றன. நாம் விரதம் இருக்கவில்லை என்றால் நமது உறுப்புகளுக்கு ஓய்வு கிடைக்காது இதனால் வயிற்றில் தேங்கிய அழுக்குகள் வெளியேறாது மற்றும் எடை அதிகரிக்கும்.
டிடாக்ஸ் டிரிங்கஸ் குடிக்கவும்
நாம் கட்டிய வீடு நாளுக்கு நாள் பழையதாகி விட்டால், சுவர்களில் நிறைய அழுக்குகள் சேரத் தொடங்கும். நம் உடலும் அப்படித்தான். தொடர்ந்து சாப்பிடுவதால், குடல், கல்லீரல் மற்றும் குடலில் அழுக்குகள் சேர ஆரம்பித்து, நமது எடை வேகமாக அதிகரிக்கத் தொடங்குகிறது. அவற்றின் உள்ளே குவிந்துள்ள நச்சுக்களை அகற்ற, நீங்கள் டிடாக்ஸ் சாறு உட்கொள்ள வேண்டும்.
பழங்கள்
பருவகால பழங்களை உடல் உறுப்புகளை சுத்தம் செய்ய மிகவும் சிறந்தது. தேங்காய் மிகவும் நல்லது. மேலும், உங்கள் உணவில் பருவகால பழங்களை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுபேற்காது.)
மேலும் படிக்க | Liver Detox: கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கும் மேஜிக் ட்ரிங்க்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ