கொழுப்பு கரைய.... மெட்டபாலிஸத்தை அதிகரிக்கும் ‘சில’ சூப்பர் உணவுகள்!
Metabolism & Weight Loss: மெதுவான வளர்சிதை மாற்றம் உங்களை சோம்பலாக உணரச் செய்து எடையை அதிகரிக்கச் செய்யும். உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும் சில உணவுகளை அறிந்து கொள்ளலாம்.
நாம் சாப்பிடுவதையும் குடிப்பதையும் ஆற்றலாக மாற்றும் செயல்முறை வளர்சிதை மாற்றம் என்று அழைக்கப்படுகிறது. இந்தச் செயல்பாட்டில், உணவு மற்றும் பானங்களில் உள்ள கலோரிகள் ஆக்ஸிஜனுடன் கலந்து, உங்கள் உடலின் செயல்பாட்டிற்குத் தேவையான ஆற்றலை வெளியிடுகின்றன. அனைவருக்கும் வேகமான வளர்சிதை மாற்றம் தேவை, ஆனால் அதிவேகமான உலகத்தின் காரணமாக, நமது வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கம் காரணமாக, ஒரு நல்ல வளர்சிதை மாற்றம் என்பது கடினமாகிறது.
மெதுவான வளர்சிதை மாற்றம் நாள்பட்ட சோர்வு அல்லது மந்தமான உணர்வுக்கு வழிவகுக்கும். வளர்சிதை மாற்றம் மெதுவாக இருந்தால், உணவை உடைத்து கலோரிகளை ஆற்றலாக மாற்றும் செயல்முறை மெதுவாக இருக்கும், மேலும் இந்த செயல்முறை மெதுவாக இருந்தால், உங்கள் ஒட்டுமொத்த ஆற்றல் நிலை குறையும். ஆனால் உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கக்கூடிய சில சிறந்த உணவுகள் உள்ளன. அவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது மிகுந்த பலன் தரும்
வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க செய்யும் உணவுகள்:
முழு தானியங்கள்:
பிரவுன் அரிசி, பார்லி, ஓட்ஸ் மற்றும் தினை போன்ற நார்ச்சத்து நிரம்பிய முழு தானியங்கள், அதே எண்ணிக்கையிலான கலோரிகளைக் கொண்ட மற்ற உணவுகளுடன் ஒப்பிடும்போது உங்கள் வயிற்றை அதிக அளவில் நிரப்பி வயிறு நிறைந்த உணர்வைத் தருகின்றன. இது உங்களை நீண்ட நேரம் பசி உணர்வின்றி இருக்க வைக்கும். நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை மெல்லுவது சற்று கடினம், எனவே அவற்றை சாப்பிடும் போது, உங்கள் வாய் கடினமாக வேலை செய்கிறது. மேலும் அது 10 சதவீதம் அதிக கலோரிகளை எரிக்கிறது.
இலவங்கப்பட்டை:
உடலுக்கு சூட்டை கொடுக்கும் இலவங்கபட்டை மசாலாவை உங்கள் உணவில் சேர்ப்பது, வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும். மேலும், இது குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இது எடை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் அடிவயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பை எரிக்க குறிவைக்கிறது.
மேலும் படிக்க | எப்போதாவது வெள்ளை வெங்காயம் சாப்பிட்டிருக்கிறீர்களா? இந்த பிரச்சனைகள் எல்லாம் தீரும்
கிரீன் டீ
கிரீன் டீ பற்றி நீங்கள் முன்பே கேள்விப்பட்டிருக்கலாம். க்ரீன் டீ குடிப்பதால், உங்கள் வளர்சிதை மாற்றத்தை 4 சதவீதம் அதிகரித்து, 70 சதவீதம் கலோரிகள் வரை எரிக்க முடியும். கிரீன் டீ கொழுப்பை உறிஞ்சுவதைத் தடுக்கிறது. சாப்பிட்ட பிறகு ஆரோக்கியமான குளுக்கோஸ் அளவை ஆதரிக்கிறது. ஒட்டுமொத்த பசியைக் குறைக்கிறது மற்றும் இன்சுலின் அதிகரிப்பதைத் தடுக்கிறது.
உணவைத் தவிர்க்காதீர்கள்
இரவு உணவைத் தவிர்ப்பது உங்கள் உடல் பருமனை குறைக்கும் மாற்றும் என்று பெரும்பாலான மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் நடப்பது அதற்கு நேர்மாறானது. உணவுகளை தவிர்ப்பது, உங்கள் உடலை பட்டினி கிடப்பதாக நினைக்க வைக்கும். எனவே அது கூடுதல் கலோரிகளை எரிப்பதற்குப் பதிலாக கலோரிகளை தக்க வைத்திருக்கும். பசியைத் தடுக்கவும், உங்கள் இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்கவும், உங்கள் வளர்சிதை மாற்றம் சரியாக செயல்படவும் ஒரு நாளைக்கு 5-6 முறை குறைந்த அளவிலான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
நல்ல தூக்கம்
வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பது மிகவும் சிக்கலானது அல்ல, நீங்கள் அதில் யோசித்து உணவு வகைகளை உண்டு, உடல் பயிற்சிகளை செய்தால் அது எளிது. நல்ல தூக்கத்தைப் பெறுவதும் விரைவான வளர்சிதை மாற்றத்திற்கான வழிகளில் ஒன்றாகும். நீங்கள் குளிர்ந்த நீர், காபி மற்றும் அதிக புரதம் நிறைந்த பானத்தையும் குடிக்கலாம். கூடுதலாக, வளர்சிதை மாற்றம் சிறப்பாக இருக்க ஆரோக்கியமான மற்றும் சீரான உணவை சாப்பிடுவது மிகவும் முக்கியம்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | இள நரை பிரச்சனையா? இந்த இயற்கை வைத்தியத்தை ட்ரை பண்ணுங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ