Brain Health: மூளையை பலவீனமாக்கும் இந்த பழக்கங்களுக்கு NO சொல்லுங்க
உடலின் கண்ட்ரோல் ரூம் என்ற வகையில் செயல்படும் மூளையை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். மூளைக்கு ஏதேனும் பாதிப்பு என்றால், அது உடல் முழுவதையும் பாதிக்கும்.
நமது முழு உடலும் மூளையால் கட்டுப்படுத்தப்படுகிறது. உடலின் கண்ட்ரோல் ரூமாக செயல்படும் மூளை பலவீனமடையத் தொடங்கும் போது, எந்தவொரு வேலையையும் செய்வதிலும் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். நமது சில பழக்கங்கள் மூளையை பலவீனமாக்கி விடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மூளையை பலவீனப்படுத்தும் கெட்ட பழக்கங்கள்
சில தவறான பழக்கவழக்கங்கள் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால், நம் மூளை பலவீனமடையத் தொடங்குகிறது. மூளைக்கு ஏதேனும் பாதிப்பு என்றால், அது உடல் முழுவதையும் பாதிக்கும். எனவே மூளையை பாதிக்கும் கெட்ட பழக்கங்கள் உடனடியாக கைவிடப்பட வேண்டும்.
1. அதிக சர்க்கரை சாப்பிடுவது
அதிக இனிப்புகள் மூளையின் செயல் திறனை பாதித்து, அவரது அறிவாற்றல் குறையத் தொடங்கும் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மேலும் நினைவாற்றலும் மோசமாக பாதிக்கப்படும் என்கின்றனர். எனவே அதிக அளவில் இனிப்புகள் முக்கியமாக, சர்க்கரை கலந்த இனிப்புகள் தவிர்க்க வேண்டும்
2. அளவுக்கு அதிகமான கோபம்
சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கூட கோபப்படும் பழக்கம் உள்ளவர்களின் மூளை படிப்படியாக வேலை செய்வதை நிறுத்திவிடும் என்கின்றனர் நிபுணர்கள். கோபமாக போது, மூளையின் நரம்புகள் மீது அழுத்தம் ஏற்படுகிறது. அது அவற்றை பலவீனமாக்குகிறது. இதனால் மூளையின் சக்தி குறையத் தொடங்குகிறது.
3. காலை உணவை தவிர்த்தல்
காலையில் காலை உணவைத் தவிர்க்கும் பழக்கம் மூளையின் செயல் திறனை பாதிக்கும். மூளையின் ஆற்றல் குறைந்து விடும். ஏனெனில், காலை உணவை தவிர்ப்பதால், உடலுக்கும் மனதுக்கும் அன்றைய நாளுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்காமல், சோர்வாக இருக்கும். இந்தப் பழக்கம் மூளையை மட்டுமல்லாமல் உடலையும் சேர்ந்து பலவீனமாக்கும்.
4. தூக்கமின்மை
தினமும் 7 முதல் 8 மணி நேரம் தூங்கவில்லை என்றால், மூளைக்கும் முழுமையாக ஓய்வு கிடைப்பதில்லை. எனவே, சோர்வு காரணமாக மூளை திறமையாக வேலை செய்யாது. மேலும் முகத்தை மூடிக்கொண்டு தூங்கும் பழக்கம் காரணமாக, போதிய அளவு ஆக்ஸிஜன் கிடைக்காமல், உடலில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் மூளை செல்கள் பலவீனமடையத் தொடங்கும்.
மேலும் படிக்க | Brain Health: மூளை சோர்வு, மன பாரத்தை நீக்கும் அற்புத மூலிகைகள்
ஆரோக்கியமான மூளைக்கு செய்ய வேண்டியவை
கீழ்கண்ட 8 உணவுகள் மூளையை கூர்மையாக்கும்
-பிளாக் சாக்லேட்
- க்ரீன் டீ
- ப்ரோக்கோலி
- வாதுமை பருப்பு
- பெர்ரி
- மாதுளை
- பூசணி விதைகள்
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | மூளையின் செயல் திறனை பாதிக்கும் ‘5’ ஆபத்தான உணவுகள்..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR