How To Prevent Osteoporosis: வயது ஏற ஏற, மனிதர்களின் எலும்புகள் பலவீனமடையத் தொடங்கும். கால்சியம் குறைபாடு காரணமாக எலும்புகள் வலுவை இழந்தால், ஆஸ்டியோபோரோசிஸ் (osteoporosis) என்ற நோய் தாக்கும் அபாயம் அதிகரிக்கும். ஆஸ்டியோபோரோசிஸ் என்பது எலும்பு மெலிதல் நோய். இது தாக்கினால் எலும்புகள் மிகவும் பலவீனமானதகாவும், எளிதில் உடையக் கூடியதாகவும் ஆகும். இதனால், மூட்டு வலியும் ஏற்படும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நமது எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு கால்சியம் மிகவும் முக்கியமானது. இது தவிர, கால்சியம் நமது உடலின் வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில், கால்சியத்தின் சிறந்த ஆதாரமாக இருக்கும் சில உணவுகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம். இவற்றை உங்கள் டயட்டில் வழக்கமாக சேர்ப்பதன் மூலம், உங்கள் எலும்புகளின் ஆரோக்கியத்தை (Health Tips) சிறப்பாக பராமரிக்கலாம்.


எள் அல்லது எள்ளு 


வெள்ளை மற்றும் கருப்பு எள் இரண்டிலும் கால்சியம் அதிகம் உள்ளது. 100 கிராம் எள்ளில் 1400 மி.கி கால்சியம் இருப்பதால்  தினமும் 2-4 ஸ்பூன் எள் சாப்பிட்டு வந்தாலே போதும். கால்ஷியம் குறைபாடு என்பதே ஏற்படாது. எலும்புகள் வலுவாக இருக்கும். 


சியா விதைகள்


சியா விதைகளில் கால்சியம் தவிர,  நார்ச்சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், புரதம்,  பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. எலும்பை வலுவாக்கி, மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெற சியா விதைகளை உட்கொள்ளலாம். 


ப்ரோக்கோலி


உடலில் கால்சியம் குறைபாட்டைப் போக்க, ப்ரோக்கோலியை டயட்டின் ஒரு பகுதியாகச் செய்யுமாறு சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். பச்சை நிற காய்கறியில் கால்சியம் நிறைந்துள்ள ப்ரோக்கோலி உங்கள் எலும்பு ஆரோக்கியத்தை சிறாந்த அளவில் மேம்படுத்தும். இருப்பினும், ப்ரோக்கோலியை உட்கொள்ளும் போது, ​​அதை  அளவிற்கு அதிகமாக வேக வைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அளவுக்கு அதிகமாக சமைத்தால் அதன் சத்துக்கள் வீணாகி விடும்.


மேலும் படிக்க | அளவுக்கு அதிகமானால் வெள்ளரியும் வில்லனாகும்: வெள்ளரிக்காயின் பக்க விளைவுகள் இதோ!


மீன் உணவுகள்


மீன்கள் கால்சியத்தின் சிறந்த ஆதாரம். அதிலும் குறிப்பாக மத்தி மீன் உங்களுக்கு ஒரு நல்ல தேர்வாக இருக்கும். உங்கள் உடலில் கால்சியம் குறைபாடு விரைவாக ஈடுசெய்யப்படுகிறது. நீங்கள் 100 கிராம் மத்தி மீன்களை உட்கொண்டால், நீங்கள் 325 mg கால்சியம் வரை பெறலாம். 


பாதாம் பருப்பு


பாதாம் பருப்பு சாப்பிடுவதன் மூலம்  மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் என்பதௌ அனைவரும் அறிந்த விஷயம். அதே சமயத்தில் உங்கள் உடலில் கால்சியம் குறைபாட்டை  போக்க பாதாம் உதவும். மேலும் இதிலுள்ள அதிக அளவிலான ஒமேகா 3 கொழுப்பு அமிலம், பல வகைகளில் எலும்பு ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. உங்கள் எலும்பு ஆரோக்கியம் பாதிக்கப்படாமல் பாதுகாக்க விரும்பினால், தினமும் ஒரு கைப்பிடி பாதாம் பருப்பை சாப்பிடுங்கள்.


கீரை


உங்கள் எலும்பு ஆரோக்கியத்தை வலுப்படுத்தவும், முதுமை காரணமாக ஏற்படும் மூட்டு வலியிலிருந்து உங்களைப் பாதுகாக்கவும், கீரை அவசியம். கீரை போன்ற பச்சை இலைக் காய்கறிகள் எலும்புகளை வலுப்படுத்துவதோடு மட்டுமல்லாமடல் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவியாக இருக்கும்.


பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.


மேலும் படிக்க | லுடீன் சத்து நிறைந்த மிளகாய்... உடலில் ஏற்படும் அற்புத மாற்றங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ